

நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் ஆண்டவர் தர்காவில் 458-ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா இன்று (21-ம் தேதி) இரவு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முன்னதாக, காலை 10 மணியளவில் நாகப்பட்டினம் பள்ளிவாசலிலில் இருந்து கொடி எடுத்து வரப்பட்டு, அலங்கார வாகனத்தில் வைக்கப்படும். பின்னர், நாகப்பட்டினம் முக்கிய வீதிகள், நாகூர் கடைத் தெருக்கள் வழியாக ஊர்வல மாக எடுத்துச் செல்லப்படும். கொடி ஊர்வலம் தர்காவை அடைந்தவுடன், இரவு 9 மணியளவில் தர்காவில் உள்ள மினராக்களில் கொடியேற்றப்பட்டு, கந்தூரி விழா முறைப்படி தொடங்கி வைக்கப்படும்.
மார்ச் 28-ம் தேதி இரவு வாணவேடிக்கையும், 29-ம் தேதி இரவு 10 மணிக்கு பீர் வைக்குதல் நிகழ்ச்சியும், 30-ம் தேதி மாலை சந்தனக்கூடு ஊர்வலமும், 31-ம் தேதி அதிகாலை சந்தனம் பூசும் வைபவமும், ஏப். 1-ம் தேதி பீர் ஏகுதலும் நடைபெறவுள்ளன. தொடர்ந்து, 3-ம் தேதி கொடி இறக்கத்துடன் விழா நிறைவடையும்.
விழா முன்னேற்பாடுகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்டவற்றை நாகூர் தர்கா நிர்வாகக் குழு, நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம், நாகப்பட்டினம் நகராட்சி ஆகியன இணைந்து செய்து வருகின்றன.