Published : 01 Mar 2015 11:33 AM
Last Updated : 01 Mar 2015 11:33 AM

பட்ஜெட்: பொதுமக்கள் கருத்து

நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் குறித்த பொதுமக்களின் கருத்துகள் வருமாறு:

ஷில்பா:

தமிழகத்தில் அகில இந்திய மருத்துவக் கல்லூரி அமைக்கப்போவதாக அறிவித் திருப்பது வரவேற்கத்தக்கது. 50 ஆயிரம் கழிப்பறைகளைக் கட்டுவது, 80ஆயிரம் பள்ளிகளை தரம் உயர்த்துவது ஆகியவையும் நல்ல அம்சங்கள். ஆனால் வரு மான வரி உச்சவரம்பை உயர்த்தா ததும், பெண்களுக்கு அதிக வரம்பு அறிவிக்காததும் ஏமாற்றமளிக் கிறது.

சுசீலா:

சேவை வரியை அதிகரித் திருப்பது மத்திய தர வர்க்கத்தின் மீதான சுமையை அதிகப்படுத்தும். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கல்விக்கு ரூ.69 ஆயிரம் கோடி மட்டும் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பாது காப்புக்கான ஒதுக்கீடு 10 சதவீதம் அதிகரித்துள்ளது. வருங்கால வைப்பு நிதி கட்டாயமில்லை என்று கூறியிருப்பதும் மத்திய தர வர்க்கத்தை பாதிக்கும்.

நாகராஜன்:

ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்துக்கு கடந்த ஆண்டை விட ரூ.14 ஆயிரம் கோடி குறைவாக நிதி ஒதுக்கப்பட் டுள்ளது. இதனால் கிராம மக்களி டையே பண புழக்கம் குறையும்.

கே.வி.ராஜ்குமார், (செயல் தலைவர் தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம்) :

இந்த பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு 3 சதவீதத்துக்கும் குறை வாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாய காப்பீடு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. விவசாயி களுக்கு இது பெரும் ஏமாற்றமாக உள்ளது. இளைஞர்களை விவசா யத்தில் ஈடுபடுத்துவது தொடர் பாகவும் மழைக்கு ஆதாரமான காடு வளர்ப்பு திட்டம் பற்றியும் பட்ஜெட் டில் எதுவும் குறிப்பிடவில்லை.

குமார் :

2020-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கட்டித் தருவதாக கூறியிருப்பது சிறப்பான விஷயம். ஆனால் அதை முறையாக அமல்படுத்த வேண்டும். அடிதட்டு மக்களுக்கு நேரடியாக பலனளிக்கக் கூடிய வகையில் இந்த பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.

அகர்வால்:

விலைவாசி உயர்ந் தும், வைப்புத் தொகைகளின் | வட்டி விகிதம் குறைந்தும் வருகிறது. இந்நிலையில் சேவை மற்றும் இதர வரிகளை உயர்த்தியிருப்பது சேமிப்புகளை மட்டுமே நம்பி வாழும் முதியவர்களை பாதிக்கும். எனவே, அவர்களுக்கான வரு மான வரி உச்சவரம்பை அதிகரித்திருக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x