

தமிழக எல்லையோர வனப் பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி நிறுவனர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.
அவர் நேற்று கரூரில் செய்தியாளர்களிடம் கூறியது:
பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படு வதில்லை என்று பெண் உரிமை இயக்கங்கள் கூறுவதை ஏற்க முடியாது. பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படு கிறது. பல குடும்பங்களில் ஆண் களைவிட பெண்களுக்கே அதிக உரிமை உள்ளது. ஒன்றிரண்டு சம்பவங்களைக் கொண்டு, பெண் களை அடிமையாக நடத்துவதாகக் கூறுவது சரியல்ல.
மத்திய பட்ஜெட்டில் விவசாயத் துக்கோ, ஜவுளித் துறைக்கோ முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. இந்திய ஜவுளிகளுக்கு தற்போது சர்வதேச அளவில் தேவை ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை முழு மையாகப் பயன்படுத்தவேண்டும்.
சாயக் கழிவுநீர் பிரச்சினையைத் தீர்க்க கடந்த ஆண்டு தமிழக அரசு ரூ.700 கோடி நிதி ஒதுக்கியது. ஆனால், பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனையளிக்கிறது.
அதிமுக அரசு ஆட்சிக்கு வந்த போது 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் உபகரணங்கள் வழங் கப்படும் என அறிவித்தது. ஆனால், 3 ஆண்டுகளாகியும் மானியம் வழங்கப்படவில்லை. சொட்டுநீர்ப் பாசனத் திட்டத்தை முழுஅளவில் செயல்படுத்த வேண்டும்.
கேரளம், கர்நாடக மாநில எல்லையோர வனப் பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்ப தாகவும், அவர்களால் மக்களுக்கு தொல்லைகள் ஏற்படுவதாகவும் தெரிகிறது. மேலும், மாவோயிஸ்ட் அமைப்புக்கு ஆட்கள் சேர்ப்பதற் கான பணிகளும் நடப்பதாகத் தெரிகிறது. எனவே, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.