

புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்குள்ள 88 வது வார்டில் நேற்று நோயாளிகள் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தனர். அப்போது அருகில் உள்ள அறுவை சிகிச்சை மைய ஏசி இயந்திரத்தில் திடீரென தீப் பிடித்தது.
சிறிது நேரத்தில் அந்த அறை முழுவதும் தீ பரவி புகை மூட்டமாக மாறியது. இதை பார்த்த நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இதைத் தொடர்ந்து தகவலறிந்து கோரிமேடு தீயணைப்பு நிலைய அதிகாரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 3 வாகனங்களில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் தீ கட்டுப்படுத்தப்பட்டது.
தீ விபத்து காரணமாக புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.