

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதைக் கண்டித்து மார்ச் 28ம் தேதி தமிழ்நாட்டில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது.
விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இதில் அதிமுக , கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் கூட்டத்தில் பங்கேற்றன.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டு, ராசிமணல் ஆகிய இடங்களில் புதிய அணைகளை கட்டப்போவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளதற்கு இந்தக் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து வரும் 28ம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.