Published : 05 Mar 2015 09:07 AM
Last Updated : 05 Mar 2015 09:07 AM

மாசி திருவிழா தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று நடைபெற்ற மாசி திருவிழா தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிப்ரவரி 23-ல் கொடியேற்றத்துடன் மாசி விழா தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்மன் வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் 10-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

காலை 6 மணிக்கு முதலாவதாக விநாயகர் தேரும் அதனைத் தொடர்ந்து 6.50 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் குமரவிடங்க பெருமான் எழுந்தருளிய பெரிய தேரோட்டம் நடைபெற்றது. பெரியத் தேரைத் தொடர்ந்து தெய்வானை அம்மன் தேர் 9.20 மணிக்கு புறப்பட்டு 10.45 மணிக்கு நிலைக்கு வந்தது.

இந்த தேரோட்டத்தில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

மாசித் திருவிழாவின் 11-ம் நாளான இன்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x