

பால் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது என்று சென்னையில் நடைபெற்ற கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குநர் எஸ்.ஐயப்பன் பெருமிதத்துடன் கூறினார்.
17-வது பட்டமளிப்பு விழா
தமிழ்நாடு கால்நடை மருத் துவப் பல்கலைக்கழகத்தின் 17-வது பட்டமளிப்பு விழா சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி அரங்கில் நேற்று நடை பெற்றது. பல்கலைக்கழக வேந் தரும், தமிழக ஆளுநருமான கே.ரோசய்யா தலைமை வகித் தார். இணைவேந்தரும், கால் நடை பராமரிப்புத்துறை அமைச்ச ருமான டி.கே.எம்.சின்னையா முன்னிலை வகித்தார்.
விழாவில் மத்திய அரசின் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை செயலரும், இந் திய வேளாண் ஆராய்ச்சி கவுன் சிலின் (ஐசிஏஆர்) தலைமை இயக்குநருமான எஸ் ஐயப் பன் பட்டமளிப்பு விழா உரையாற் றினார். அப்போது அவர் கூறிய தாவது:
நம் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) மூன்றில் ஒரு பங்கு கால்நடை துறையிலிருந்து வருகிறது. அதே போல், விவசாயம், கால்நடை சார்ந்த பொருட்கள் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்யப்படு கின்றன. இது நமது ஏற்றுமதியில் 17 சதவீதம் ஆகும். உலக அளவில் பால் உற்பத்தியில் 17 சதவீதம் வழங்கி இந்தியா முதலிடம் வகிக்கிறது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகமானது, மாவட்ட அளவில், வட்டார அளவில் என கீழ்மட்ட அளவில் இறங்கி விவசாயி களுக்கு கால்நடை வளர்ப்புப் பயிற்சி களை அளித்து வருவது பாராட் டுக்குரியது.
முதல்முதலாக குளோனிங் முறையில் ‘டோலி’ என்ற செம்மறியாட்டை வெளிநாட்டினர் உருவாக்கியபோது பரபரப்பாக பேசப்பட்டது. இப்போது நமது விஞ்ஞானிகள் குளோனிங் முறையில் எருமையினங்களை உருவாக்கி வெளிநாட்டினரோடு நம்மாலும் போட்டியிட முடியும் என்பதை நிரூபித்து வருகிறார்கள்.
இவ்வாறு ஐயப்பன் கூறினார்.
18 பதக்கம் வென்ற மாணவர்
பல்கலைக்கழக அளவில் சிறப் பிடம் பெற்ற 34 மாணவ- மாணவிகளுக்கு ஆளுநர் ரோசய்யா தங்கப் பதக்கங்களை யும் விருதுகளையும் வழங்கி னார். பிவிஎஸ்சி படிப்பில் ஜிதேந் திர குமார் என்ற மாண வர் 18 விருதுகளையும், பதக்கங்களை யும் வென்றார்.
படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களையும், சிறந்த ஆசிரியர்களையும் கவுரவிக்கும் வகையில் இந்த ஆண்டு புதிதாக 4 பதக்கங்களும், விருதுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா அறிமுகம் செய்து பேசினார். முன்னதாக, துணைவேந்தர் எஸ்.திலகர் வரவேற்று ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். விழாவில் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் திரளாக கலந்துகொண்டனர்.