

தேமுதிக எம்எல்ஏக்கள் தினகரன் மற்றும் சேகர் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைக் காவலர்களை தாக்கிய புகாரில், சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சமீபத்தில் சட்டப்பேரவையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குறித்து தேமுதிக உறுப்பினர் மோகன்ராஜ் தெரிவித்த கருத்துக்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தால் தேமுதிக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். அப்போது சபைக் காவலர்களை தேமுதிக எம்எல்ஏக்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து, தேமுதிக எம்எல்ஏக்கள் தினகரன் மற்றும் சேகர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.