Published : 09 Mar 2015 08:36 AM
Last Updated : 09 Mar 2015 08:36 AM

நீலகிரியில் கன மழை: குன்னூரில் காட்டாற்று வெள்ளம்: வாகனங்கள், கால்நடைகள் மாயம்

கன மழை காரணமாக குன்னூரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர் மற்றும் குந்தா தாலுகாக் களில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. குன்னூரில் நேற்று அதிகாலை 3 மணிக்கு கனமழை பெய்யத் தொடங்கியது. இதன் காரணமாக தாழ்வான பகுதி யில் அமைந்துள்ள கிருஷ்ணா புரத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டது. வெள்ளத்தால் அடித்த வரப் பட்ட மண், கல் மற்றும் கழிவுகள் ஆற்றின் குறுக்கேயிருந்த நடை பாலத்தை அடைத்தன. இதனால் வெள்ள நீர் வெளியேற முடியாமல், நடைபாலம் மற்றும் ஆற்றோரம் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்தது. காட்டாற்று வெள்ளத்தில் கார்கள், ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் என 30-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. கொட்ட கையில் கட்டப்பட்டிருந்த எருமை மற்றும் மூன்று பசுக்கள் வெள்ளத்தில் மூழ்கி பலியாகின.

மீட்புப் பணி

நேற்று காலை சுமார் 5 மணி யளவில் மழை குறைந்த பின்னரே, மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேற முடிந்தது.

மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர், எம்பிக்கள் கே.ஆர்.அர்ஜூணன், கோபாலகிருஷ்ணன், குன்னூர் நகராட்சித் தலைவர் சரவண குமார் ஆகியோர் வெள்ளம் சூழ்ந்த கிருஷ்ணாபுரத்துக்கு வந்து மீட்புப் பணிகளை பார்வை யிட்டு விரைவுபடுத்தினர்.

கிருஷ்ணாபுரத்தில் ஆற்றில் வெள்ள நீர் வெளியேறும் வகை யில் தீயணைப்புத் துறையினர், நகராட்சி ஊழியர்கள், பொதுமக் கள் உதவியுடன் கழிவுகள் அகற்றப்பட்டன. ஜே.சி.பி. மூலம் நடைபாலங்களில் ஏற்பட்ட அடைப் புகளை அகற்றியதால் வெள்ள நீர் வடிந்தது. வாகனங்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

புறக்கணிக்கப்பட்ட ஆறு

கிருஷ்ணாபுரம் அருகே வசிக் கும் அனந்தகிருஷ்ணன் கூறும் போது, கடந்த 2009-ம் ஆண்டு மழை காரணமாக ஆற்றில் ஒரு வீடு இடிந்து விழுந்தது. அந்தக் கழிவுகள் அகற்றப்படவேயில்லை. ஆற்றில் கழிவுகள் தேங்கியதாலும், கிருஷ்ணாபுரத்தில் உள்ள நடை பாலத்தின் உயரம் குறைவாக இருப்பதாலும், கழிவுகள் பாலத்தில் அடைபட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்றார்.

ஆற்றில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததால், ஆறு கால்வாயாக சுருங்கி விட்டது. இதனால் கன மழை பெய்யும்போது, வெள்ள நீர் வெளியேற முடியாமல் குடி யிருப்புகளை சூழ்ந்து விடுகிறது என்றனர் அப்பகுதி மக்கள்.

மழை அளவு

நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் 194.60 மி.மீ. மழை பதிவானது. அதிகபட்சமாக குன்னூரில் 88 மி.மீ., கேத்தியில் 18 மி.மீ., கோத்தகிரியில் 13 மி.மீ., உதகையில் 7.60 மி.மீ., கெத்தையில் 12 மி.மீ., பர்லியாறில் 20 மி.மீ., மழை பதிவானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x