சென்னையில் இட்லி தினம் கொண்டாட்டம்

சென்னையில் இட்லி தினம் கொண்டாட்டம்

Published on

முதல் உலக இட்லி தினத்தை தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் சங்கத்தினர் 44 கிலோ எடையுள்ள இட்லியை வெட்டி நேற்று கொண்டாடினர்.

சென்னை கொடுங்கையூரில் தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மார்ச் 30-ம் தேதியை உலக இட்லி தினமாக அறிவித்து, அதை கொண்டாடும் வகையில் நேற்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சி குறித்து அச்சங்கத்தின் பொதுச் செய லாளர் ராஜாமணி கூறிய தாவது:

தமிழகத்தின் பாரம்பரிய உணவாக இட்லி உள்ளது. உடலுக்கு கேடு விளைவிக்காத ஆரோக்கியமான உணவு இட்லி ஆகும். எங்களுடைய சங்கம் சார்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு 1,300 வகையான இட்லிகள் தயாரிக்கப்பட்டன. இதுபோன்ற நிகழ்வு வேறு எங்கும் நடைபெற்றது இல்லை. இட்லியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்-30 உலக இட்லி தினமாக கொண்டாட வேண்டும். அதற்கான முதல் நிகழ்வாக இன்று(நேற்று) உலக இட்லி தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in