மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை நிறைவேற்ற ஜி.கே.வாசன் வேண்டுகோள்

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை நிறைவேற்ற ஜி.கே.வாசன் வேண்டுகோள்
Updated on
1 min read

மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது மத்திய - மாநில அரசுகளின் கடமையாகும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல ஆண்டுகளாக பல திட்டங்களை அரசு அறிவித்து, அது அரசாணையாக வெளியிடப்பட்டும் இன்னமும் அவை நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கின் றன. இந்திய அரசால் 1995-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கென்று உருவாக் கிய சட்டத்தை ஏற்றுக்கொண்டு, அவை தமிழக சட்டசபையிலும், பல துறையின் செயலாளர் ஆணைகளிலும் இடம் பெற்றுள் ளன. அந்த அரசாணைகள் இன்னும் நிறைவேறாமல் இருக்கின்றன. அவற்றை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் சட்டத்தில் வரையறுத்துள்ளபடி 6 மாதங்களுக்கு ஒருமுறை கூட்டப்பட வேண்டிய மாநில ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெறவில்லை. அதேபோல ஒருங்கிணைப்புக் குழுவில் எடுக்கப்படும் முடிவுகளைச் செயல்பாட் டுக்கு கொண்டுவர வேண்டிய மாநில செயல்பாட்டுக் குழு கடந்த 13 ஆண்டு களாக அமைக்கப் பெறாமல் இருக்கின்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கக் கூடிய 3 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியும்கூட, மாநிலத் தலைமை அதனை நடைமுறைப்படுத்தவில்லை. அவர்களுக்கான நலவாரியமும் அமைக்கப்படாமல் இருக்கிறது.

தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதி களிலும் வாழும் மாற்றுத்திறனாளிகளைக் கண்டறிந்து, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுத்து, அடையாள அட்டை வழங்கி அவர்களுக்கு அரசு சலுகைகள் முழுமையாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in