

மகாத்மா காந்தி குறித்து தவறான கருத்தை தெரிவித்ததாக முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு மீது தமிழருவி மணியன் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
சென்னை எழும்பூர் 10-வது குற்றவியல் நீதிமன்றத்தில் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் சார்பில் வழக்கறிஞர் பிரபாகரன் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், "முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தன்னுடைய சமூக வலை தளத்தில் மகாத்மா காந்தி குறித்து தவறான கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று நடந்தது. பின்னர் விசாரணையை வருகிற 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.