Published : 07 Mar 2015 07:15 PM
Last Updated : 07 Mar 2015 07:15 PM

தமிழக வேளாண் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கம்

தமிழக வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி அமைச்சரவை யில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் கவனித்து வந்த வேளாண் துறை, அமைச்சர் வைத்திலிங் கத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை நேற்று மாலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப் பில் கூறியுள்ளதாவது:

தமிழக அமைச்சரவையில் இருந்து வேளாண்மைத்துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தியை விடுவிக்க வேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பரிந் துரை செய்தார். இந்தப் பரிந் துரையை ஆளுநர் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, அமைச்சரவையில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறார்.

அவர் கவனித்து வந்த வேளாண்மை மற்றும் வேளாண்மை பொறியியல் உள் ளிட்ட துறைகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் கூடுதலாக கவனிப்பார். ஆர்.வைத்திலிங்கம் இனி வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் என அழைக்கப்படுவார்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கட்சிப் பதவியும் பறிப்பு

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்தும், கன்னியா குமரி மாவட்டம் மற்றும் கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளர் பொறுப்புகளில் இருந்தும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நீக்குவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 2 நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.

வேளாண்மைத் துறையில் உதவி செயற்பொறியாளராக பணி யாற்றி வந்த முத்துக்குமாரசாமி என்பவர் கடந்த 20-ம் தேதி திருநெல்வேலியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். வேளாண்மைத் துறையில் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான விவகாரத் தில் மேலிடம் கொடுத்த நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டு முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தச் சூழலில் அக்ரி கிருஷ்ண மூர்த்தி கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். ‘கட்சிப் பொறுப் பிலிருந்து மட்டுமல்லாமல் அமைச்சரவையில் இருந்தும் அவரை நீக்க வேண்டும்; அவரை கைது செய்ய வேண்டும்’ என்று திமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில் அமைச்சர் பதவி யில் இருந்தும் அக்ரி கிருஷ்ண மூர்த்தி நீக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x