Published : 22 Mar 2015 10:49 AM
Last Updated : 22 Mar 2015 10:49 AM

காவிரிப் படுகையிலிருந்து பொதுத் துறை நிறுவனங்கள் வெளியேற வேண்டும்: மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு வேண்டுகோள்

மீத்தேன் திட்டத்துக்கு வழங்கப் பட்ட அனுமதியை ரத்து செய்யும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது என்ற செய்தி தமிழகத்தின் காவிரிப் படுகை யில் உற்சாகத்தை வரவழைத் திருக்கிறது என்றாலும் அபாயம் முற்றிலும் நீங்கிவிடவில்லை என்கிறார் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங் கிணைப்பாளர் ஜெயராமன்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:

மீத்தேன் எரிவாயு எடுக்க அனுமதிக்கப்பட்ட கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனம், குறித்த காலத்துக்குள் அதற்கான பணிகளை தொடங்காததாலும், உரிய ஆவணங்களை வழங்காத தாலும் அந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்வதாக மத்திய அமைச் சர் அறிவித்துள்ளார்.தவிர, மீத் தேன் எடுக்கும் திட்டத்தை முழு மையாக கைவிடுவதாக அவர் தெரிவிக்கவில்லை.

அந்நிறுவனம் பணியை தொடங்காததற்கு காரணம் விவ சாயிகள் ஒன்று திரண்டு போராடி யதுதான். இந்நிலையில் ஓஎன்ஜிசி, கெயில் போன்ற நிறுவனங்களுக்கு 2013 செப்டம்பர் மாதம் வழங்கப் பட்ட அனுமதியில், நிலக்கரி பாறையில் உள்ள வண்டல் மண் அடுக்குகளில் இருந்து மீத்தேன் வாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதனால் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனம் வெளியேறினால் மட்டும் போதாது. காவிரிப் படுகையில் இருந்து மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களான ஓஎன்ஜிசி, கெயில் உள்ளிட்ட நிறுவனங்களும் வெளியேற வேண்டும்.

ஏனெனில், அவை மறைமுக மாக அப்பணியில் ஈடுபடக் கூடும் என்று விவசாயிகள் அஞ்சு கின்றனர். அவர்களின் ஐயத்துக்கு வலுசேர்க்கும் விதமாக நிலம் கையகப்படுத்தும் சட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தைப் பயன்படுத்தி காவிரிப் படுகையில் இருந்து இந்த நிறுவனங்கள் விவசாயிகளை வெளியேற்றக்கூடும். இந்த சந்தேகங்களுக்கு இடமளிக் காமல், அனைத்து பொதுத் துறை நிறுவனங்களும் காவிரிப் படுகையை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்றார் ஜெயராமன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x