பொதுக் காப்பீட்டுத் துறை ஊழியர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை

பொதுக் காப்பீட்டுத் துறை ஊழியர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை
Updated on
1 min read

நான்கு பொதுத்துறைக் காப்பீட்டு நிறுவனங்களையும் ஒன்றாக இணைத்து ஒரே நிறுவனமாக்க வேண்டும் என்று அனைத்திந்திய பொதுக் காப்பீட்டுத் துறை சங்க செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அனைத்திந்திய பொதுக்காப் பீட்டுத் துறை சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், நாடு முழுவதிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்துக்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் பிரதீப் கே.தரம்தோக் தலைமை வகித்தார்.

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்க டாச்சலம் சிறப்புரையாற்றினார். நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவ னம், நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம், தி ஒரியண்டல் இன்சூ ரன்ஸ் நிறுவனம், யுனைடெட் இந் தியா இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகிய நான்கு நிறுவனங்களை இணைத்து ஒரே நிறுவனமாக்க வேண்டும், காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக்க கூடாது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in