செல்போனுக்கு சார்ஜ் போட முயன்றபோது ரயிலில் இருந்து தவறிவிழுந்த டாக்டர் பலி

செல்போனுக்கு சார்ஜ் போட முயன்றபோது ரயிலில் இருந்து தவறிவிழுந்த டாக்டர் பலி
Updated on
1 min read

ஓடும் ரயிலில் செல்போனுக்கு சார்ஜ் போட முயன்றபோது கால் தவறி கீழே விழுந்த அரசு மருத்துவமனை டாக்டர் பரிதாபமாக இறந்தார்.

சென்னை பழைய பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்க டேசன். தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ரேணுகாதேவி. இவர்களின் ஒரே மகன் எழில்நம்பி (34), ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் டாக்டராக பணியாற்றி வந்தார். கீழ்ப்பாக் கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தடய அறிவி யல் துறை பட்டமேற்படிப்பும் (எம்டி) படித்து வந்தார்.

மைசூரில் நடந்த மருத்துவ கருத்தரங்கில் கலந்துகொள் வதற்காக நேற்று முன்தினம் இரவு சென்னை சென்ட்ரலில் இருந்து காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் நண்பர்களுடன் எழில்நம்பி புறப்பட்டார்.

நேற்று அதிகாலை 2 மணியளவில் அரக்கோணம் அருகே உள்ள மேல்பாக்கம் என்ற இடத்தில் ரயில் சென்றுகொண்டிருந்தது. செல்போனுக்கு சார்ஜ் போடுவதற்காக, ரயில் கதவு அருகே எழில்நம்பி வந்துள்ளார். அப்போது கால் தடுமாறியதால் நிலைகுலைந்த எழில்நம்பி, ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

இதைப் பார்த்த மற்ற பயணிகள் உடனடியாக அவசர உதவி சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த எழில்நம்பியின் உடலை ரயில்வே போலீஸார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

எழில்நம்பி இறந்தது பற்றி தகவல் அறிந்ததும் டாக்டர்களும் மருத்துவ மாணவர்களும் திரண்டு வந்து அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் பெற் றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பல்லாவரம் இடுகாட்டில் நேற்று மாலை உடல் தகனம் செய்யப்பட்டது.

உயிரிழந்த எழில்நம்பிக்கு 9 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது குறிப்பிடத் தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in