ஆண்டுக்கு 10 செயற்கைக்கோள் ஏவ இலக்கு

ஆண்டுக்கு 10 செயற்கைக்கோள் ஏவ இலக்கு
Updated on
1 min read

ஆண்டுக்கு 10 செயற்கைக் கோள் களை விண்ணில் செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த தேசிய அறிவியல் தின விழாவில் இஸ்ரோ சேட்டிலைட் மைய இயக்குநர் சிவக்குமார் தெரிவித்தார்.

சோனா தொழில்நுட்ப கல்லூரி யில், மாணவ மாணவிகளின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறனை ஊக்குவிக்கும் வகையில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

கல்லூரி தலைவர் வள்ளியப்பா தலைமை வகித்தார். பெங்களூரு இஸ்ரோ சேட்டிலைட் மைய இயக்குநர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். டீன் கருணாகரன் வரவேற்றார். இஸ்ரோ சேட்டிலைட் மைய இயக்குநர் சிவக்குமார் பேசும் போது, தொழில்நுட்பத் துறை யில் சிறந்துவிளங்கும் நாம் விண்வெளித் துறையில் சுயசார் புடன் சாதனைகள் புரிந்து வருகிறோம். வரும் காலங்களில் ஆண்டுக்கு 10 செயற்கை கோள்களை ஏவ இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. அர்ப்பணிப் புடன் கூடிய உழைப்பு, கூட்டு முயற்சி, சரியான திட்டமிடல், உயரிய தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றில் சிறந்து விளங்குவ தால்தான், இந்தியா இன்று விண்வெளி ஆராய்ச்சியில் உலகள வில் வெற்றி நடை போடுகிறது. இஸ்ரோவுடன், சோனா கல்லூரி கொண்டிருக்கும் தொழில்நுட்ப தொடர்பால் மாணவர்கள் பெரும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

விழாவில் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்திருந்த மாணவ, மாணவிகளுக்கு 2 லட்ச ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in