காதலியை கொன்று மூட்டை கட்டிய வங்கி அதிகாரியை தீவிரமாக தேடும் போலீஸ்: தப்பிக்க பயன்படுத்திய பைக் சிக்கியது

காதலியை கொன்று மூட்டை கட்டிய வங்கி அதிகாரியை தீவிரமாக தேடும் போலீஸ்: தப்பிக்க பயன்படுத்திய பைக் சிக்கியது
Updated on
1 min read

காதலியை கொன்று மூட்டை கட்டி ய வங்கி அதிகாரியை தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வரு கின்றனர். அவர் வெளியூர் தப்பிச் செல்லக்கூடும் என்ற சந்தேகத்தால் ரயில் மற்றும் பஸ் நிலையங்களில் கண்காணித்து வருகின்றனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் தலைமைச் செயலக காலனி பராக்கா சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தனியார் வங்கி அதிகாரி யான தினேஷ் (25), சூளையைச் சேர்ந்த அருணாவை (22) காத லித்து வந்தார். கடந்த 9-ம் தேதி இரவு அருணாவை தனது வீட் டுக்கு வரவழைத்த தினேஷ், அவரை அடித்துக் கொலை செய்தார். அருணாவின் உடலை மூட்டை கட்டி காரில் எடுத்துச் செல்ல முயன்றபோது அடுக்கு மாடி குடியிருப்பு காவலாளி பார்த்ததால் தினேஷ் அங்கிருந்து பைக்கில் தப்பிச் சென்றுவிட்டார்.

செல்போன் வைத்திருந்தால் அதன்மூலம் போலீஸார் தன்னை கண்டுபிடித்து விடுவார்கள் என்று பயந்து, அதை தனது அம்மாவிடம் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார். தலைமறைவான தினேஷைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக் கப்பட்டுள்ளன.

ஒரு தனிப்படையினர் தினேஷின் நண்பர்கள் 14 பேரைப் பிடித்து விசாரித்தனர். ஒருவரிடம்கூட தினேஷ் பேசவில்லை என்பது தெரிந்தது. தினேஷ், கடைசியாக வீட்டருகே உள்ள ஒரு ஏடிஎம்மில் இருந்து ரூ.20 ஆயிரம் பணம் எடுத்துள்ளார். அதன்பிறகு ஏடிஎம் கார்டையும் அவர் பயன்படுத்தவில்லை.

தினேஷ் வெளியூர் தப்பிச் சென்றாரா என்ற சந்தேகத்தில், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையம் ஆகிய இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். தினேஷின் தந்தை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தந்தையைப் பார்க்க தினேஷ் வரக்கூடும் என்று கருதி, அந்தப் பகுதியிலும் அவரது வீடு இருக்கும் பகுதியிலும் போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.

தினேஷ் ஓட்டிச்சென்ற பைக்கை போலீஸார் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க தனிப்படை போலீஸார் முயன்று வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in