

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் விவசாயிகளின் அச்சத்தைப் போக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சிதம்பரத்தில் ஜி.கே வாசன் செய்தியாளர்களிடம் பேசினார். '' காவிரி பிரச்சினை தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பங்கேற்கும்.
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அதிமுக ஆதரித்ததால் மக்கள் அச்சப்படுகின்றனர். விவசாயிகளின் அச்சத்தைப் போக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
நீலகிரியில் வனவிலங்கு தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
சிதம்பரத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்'' என்று ஜி.கே வாசன் கூறினார்.