Published : 21 Mar 2015 09:50 AM
Last Updated : 21 Mar 2015 09:50 AM

பார் கவுன்சில் அலுவலகத்தை முற்றுகையிட்ட வழக்கறிஞர்கள்: செருப்பு, கற்கள் வீசியதால் பரபரப்பு

தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத் துக்கு பார் கவுன்சில் அங்கீகா ரம் வழங்கியதைக் கண்டித்து சென்னையில் நேற்று வழக்க றிஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது பார் கவுன்சில் அலுவலகம் மீது செருப்பு, கற்கள் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு (டிஎன்ஏஏ) அங்கீ காரம் வழங்கிய தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலைக் கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டமும், பார் கவுன்சிலை முற்றுகையிடும் போராட்டமும் நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்திருந்தது. அதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னை உயர் நீதிமன்ற வழக் கறிஞர்கள் சங்க (எம்எச்ஏஏ) தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் தலைமையில் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் நேற்று திரண்டனர். அங்கிருந்து பேரணியாக சென்ற அவர்கள், என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள பார் கவுன்சில் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

அவர்களை போலீஸார் தடுத்த போது, அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனிடையே பார் கவுன்சில் அலுவலகத்தை நோக்கி செருப்புகள் மற்றும் கற்கள் வீசப்பட்டன. காவல்துறையினரின் இரும்பு தடுப்பை தாண்டியும், தள்ளிவிட்டும் வழக்கறிஞர்கள் முன்னேறினார்கள். தடுப்பை தாண் டிச் சென்ற வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் அலுவலகத்துக்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் அங்கிருந்த பொருட்கள் சேதமடைந்தன.

காவல்துறையினருடன் தகராறு செய்ய வேண்டாம் என்றும், பார் கவுன்சில் முற்றுகைப் போராட் டத்தில் அத்துமீறல் வேண்டாம் என்றும் வழக்கறிஞர்களை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறி ஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ் கேட்டுக் கொண்டார். இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் ஆவின் பாலகம் அருகே கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங் கத்துக்கு வழங்கப்பட்ட அங்கீ காரத்தை பார் கவுன்சில் உடனடி யாக ரத்து செய்ய வேண்டும், எம்.எச்.ஏ.ஏ.வுக்கு எதிராக செயல்படும் வழக்கறிஞர் எஸ்.பிரபாகரனை எம்.எச்.ஏ.ஏ. உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

ஆர்.சி.பால்கனகராஜ் பேசுகை யில், “நாம் கோரியபடி பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வரும் திங்கள் கிழமை வரை அவகாசம் அளிக்கப் படுகிறது. அதன்பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத் துக்குப் பதிலாக, உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும். இப் பிரச்சினை முடிவுக்கு வரும் வரை போராட்டம் நீடிக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x