ஐ.நா. சபையில் உரையாற்றிய ஊராட்சி பள்ளி ஆசிரியை

ஐ.நா. சபையில் உரையாற்றிய ஊராட்சி பள்ளி ஆசிரியை
Updated on
1 min read

சாத்தூர் அ.ராமலிங்காபுரத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாகப் பணிபுரிபவர் ஆர்.ரமாதேவி. இவர் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மகளிர் அமைப்பின் மாநிலத் தலைவராகவும், அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் அமைப்புச் செயலராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8-ம் தேதி நியூயார்க் நகரில் ஐ.நா. சபை தலைவர் பான்-கி மூன் தலைமையில் நடைபெற்ற ஆண்-பெண் சமத்துவம் குறித்த பேரணியில் கலந்து கொண்டார்.

மேலும் ஐ.நா. சபையில் 11 மற்றும் 12 தேதிகளில் "பெண்களுக்கு எதிரான கொடுமைகளைக் களைதல்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது, ஆசிய நாடுகளில் பெண் கல்வி, அவர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து பேசினார். இதில் உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து 17 ஆசிரியைகள் பங்கேற்று பேசினர். ஆசிய நாடுகளில் இந்தியாவைச் சேர்ந்த ஆசிரியை ஆர்.ரமாதேவி கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து, யூனிசெப் நிறுவனத்தின் தலை மையகத்தில் நடைபெற்ற கருத்தரங்கிலும் பங்கேற்றார்.

ஆசிரியை ஆர்.ரமாதேவி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in