

வேளாண் துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சியினர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் வீட்டுக்குள் போலீஸ் காவலையும் மீறி ஆத் ஆத்மி கட்சியினர் 40 பேர் நுழைந்தனர். அப்போது வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் இல்லை.
முதல்வர் வீட்டுக்குள் நுழைந்த 40 பேரையும் கைது செய்யும் முயற்சியில் போலீஸ் தீவிரம் காட்டியது. ஆத் ஆத்மி கட்சியினரை குண்டு கட்டாக தூக்கி வந்து போலீஸ் கைது செய்தது.
தற்போது முதல்வர் வீடு அமைந்துள்ள கிரீன்வேஸ் சாலையில் போலீஸ் குவிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் முதல்வர் வீட்டுக்குள் நுழைந்து போராட்டம் நடத்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.