

தேனி மாவட்டம் டி.சிந்தலைச்சேரி கிராமத்தில் 10 ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் பொது நூலகத்தை திறக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கட்டிமுடிக்கப்பட்டு நீண்டகாலம் ஆகியும், இந்த பொது நூலகம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை.இதுதொடர்பாக ஊராட்சி ஒன்றியத் தலைவர் பரமசிவம் பேசினார்.
'' 700 ரூபாய் ஊதியத்தில் நூலகப் பணிக்கு ஆட்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து இந்த ஊதியத்தை வழங்க அரசு வலியுறுத்தி உள்ளது.'' என பரமசிவம் கூறினார்.