

4 பெண்களை ஏமாற்றி திரு மணம் செய்த பொறியாளரை திருமங்கலம் போலீஸார் கைது செய்தனர்.
சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (36). அண்ணா நகரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிகிறார். இவருக்கும் மது ரையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் 2006 ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் பிறந்தன. அவற்றில் ஒரு குழந்தை ஊனமுற்றதாக இருந்தது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2010 ம் ஆண்டில் மனைவியை விவாகரத்து செய்த சீனிவாசன், ஊனமுற்ற குழந்தையை மட்டும் தன்னுடன் வளர்த்து வந்தார்.
அதைத் தொடர்ந்து சென்னையை சேர்ந்த வேறு பெண்ணை சீனிவாசன் இரண்டாவதாக திருமணம் செய்து அண்ணாநகர் அருகே திருமங்கலத்தில் வசித்துவந்தார். வாரத்தில் சுமார் 4 நாட்கள் சீனிவாசன் வீட்டில் தங்காமல், வெளியூர் சென்று வந்தார். அவரது செல்போனுக்கு அடிக்கடி பெண்களிடம் இருந்து அழைப்புகளும் வந்துள்ளன. இது இரண்டாவது மனைவிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. சீனிவாசன் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது சூட்கேஸை திறந்து பார்த்தபோது, முதல் மனைவி தவிர, மேலும் 2 பெண்களுடன் சீனிவாசன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இருந்தன.
தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், இது குறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய் தார். போலீஸார் சீனிவாசனிடம் விசாரணை நடத்தியபோது, கோவை, கன்னியாகுமரியை சேர்ந்த மேலும் 2 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்திருப் பது தெரிந்தது. அவர்களை அந்தந்த ஊர்களிலேயே வீடு எடுத்து தங்க வைத்துள்ளார். அலுவலக வேலை விஷயமாக வெளியூர் செல்வதாக அனைத்து வீடு களுக்கும் அவ்வப்போது சென்று வந்துள்ளார். முதல் மனைவியை விவாகரத்து செய்ததை மட்டும் கூறி, மற்ற 3 பெண்களையும் ஒருவருக்குப் பின் ஒருவராக ஏமாற்றி திருமணம் செய்திருக்கிறார்.
முதல் மனைவியை தவிர சீனிவாசன் திருமணம் செய்த மற்ற 3 பெண்களும் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்கள். இந்த 3 பேரையும் திருமண இணையதளங்கள் மூலம் தொடர்பு கொண்டு, தன்னை நல்லவன் போல காட்டி திருமணம் செய்திருக்கிறார். ஊனமுற்ற மகனை தன்னுடன் வைத்திருப்பதால் சீனிவாசனை 3 பெண்களும் நம்பியுள்ளனர்.
திருமணம் செய்து கொண்ட அனைத்து பெண்களிடம் இருந் தும் ஏராளமான பணம், நகைகள், சொத்துகளை சீனி வாசன் வாங்கியிருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இவர் வேறு யாரையும் திருமணம் செய்து ஏமாற்றி இருக்கிறாரா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது