Published : 31 Mar 2015 10:39 AM
Last Updated : 31 Mar 2015 10:39 AM

மதுரை மல்லி விலை கடும் வீழ்ச்சி பறிப்பு கூலிக்குக் கூட வருவாய் இல்லை

நிலக்கோட்டை மலர் சந்தையில் மல்லிகைப் பூ விலை கிலோ 60 ரூபாய்க்கு வீழ்ச்சி அடைந்துள்ளதால், பறிப்பு கூலிக்கு கூட வருவாய் கிடைக்காமல் 150 கிராம மல்லிகை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் நிலக்கோட்டையில் உற்பத்தியாகும் மல்லிகைக்கு, மலர் சந்தையில் நல்ல வரவேற்பு உண்டு. ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் திண்டுக்கல் இடம் பெற்றிருந்தபோது, நிலக்கோட்டை பகுதியில் உற்பத்தியான மல்லி கையே, மதுரை மல்லி என சிறப்பு பெற்றது. நிலக்கோட்டை பகுதியில் 150 கிராமங்களில் மல்லிகை பிரதான மலர் சாகுபடியாக மேற் கொள்ளப்படுகிறது. இங்கிருந்து சிங்கப்பூர், மலேசியா, சென்னை, கோவை, பெங்களூரு மற்றும் கேர ளாவுக்கு அதிகளவு ஏற்றுமதியாகி றது.

கடந்த 4 மாதங்களுக்கு முன் பெய்த மழையால், நிலக்கோட்டை பகுதியில் தற்போது மல்லிகை விளைச்சல் அதிகமாகி உள்ளது. சந்தைகளுக்கு வரத்து அதிகரிப்ப தால், கடந்த சில வாரமாக மல்லிகை விலை குறைந்து வந்தது.

நேற்று அதிகாலையில், நிலக் கோட்டை சந்தையில் கிலோ 200 ரூபாய்க்கு விற்ற பூ, நேரம் செல்ல செல்ல வரத்து அதிகரித்ததும் கிலோ 100 ரூபாய், 60 ரூபாய் என வீழ்ச்சி அடைந்தது.

இதுகுறித்து விவசாயி விக்ரம் கூறியதாவது: தற்போது முகூர்த்த நாள், அண்டை மாநிலங்களில் முக்கியத் திருவிழாக்கள் இல்லாத தால் மல்லிகை விற்பனை, முழுக்க முழுக்க நிலக்கோட்டை நறுமணத் தொழிற்சாலைகளையே நம்பி இருக்கிறது.

அவர்கள் அடிமாட்டு விலைக்கு கேட்பதால் விலை குறைந் துள்ளது. ஒரு கிலோ பூக்களை பறிக்க எடுப்புக் கூலி 70 ரூபாய் ஆகிறது. சந்தைக்கு கொண்டு வருவதற்கு போக்குவரத்து செலவும் ஏற்படுகிறது. ஆனால், கிலோ 60 ரூபாய், 100 ரூபாய்க்கு விற்பதால் நஷ்டம் ஏற்படுகிறது. முதலீட்டை கூட எடுக்க முடியவில்லை.

கடந்த காலத்தில் மழையில்லாமல் பாதிக்கப்பட்டோம். தற்போது உற்பத்தி அதிகரித்து நஷ்ட மடைந்துள்ளோம். மல்லிகைக்கு நிரந்தர விலை கிடைக்க கூடுதல் நறு மணத் தொழிற்சாலைகள் அமைக்க வும், வெளிச்சந்தை ஏற்றுமதி வாய்ப்பை ஏற்படுத்தி தரவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x