குழந்தை திருமணத் தடை சட்டம் மதச் சார்பற்ற சட்டம் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

குழந்தை திருமணத் தடை சட்டம் மதச் சார்பற்ற சட்டம் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
Updated on
1 min read

குழந்தை திருமணத் தடை சட்டம் மத சார்பற்ற சட்டம். இது அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில், 18 வயது நிரம்பாத ஒரு இஸ்லாமிய பெண்ணுக்கு திருமணம் நடைபெறவிருப்பதை அறிந்த அரசு அதிகாரிகள், அதனை தடுத்து நிறுத்தினர்.

இதுதொடர்பான வழக்கில் 18 வயது ஆகும் வரை திருமணம் செய்ய கூடாது என பெரம்பலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அரசு அதிகாரிகள் திருமணத்தை நிறுத்தியது சரிதான் என உத்தரவிட்டது.

அந்த உத்தரவை ரத்து செய்யகோரி அந்த பெண்ணின் தந்தை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்குப் பொருந்தாது அந்த பெண்ணின் தந்தை மனுவில் கூறி இருந்தார்.

இந்த மனுவை சி.டி.செல்வம் விசாரித்தார். ''குழந்தை திருமணத் தடுப்பு சட்டம், மதச் சார்பற்ற சட்டம் . முஸ்லிம்கள், இந்துக்களின் தனிச்சட்டங்களுக்கு அப்பாற்பட்டது .

குழந்தைகளின் உடல் நலன், கல்வி, வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. குழந்தை திருமணத் தடை சட்டம் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது'' என நீதிபதி செல்வம் உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in