Published : 19 Mar 2015 10:39 AM
Last Updated : 19 Mar 2015 10:39 AM

சென்னையில் கல்வி உரிமை கோரிக்கை மாநாடு

தமிழ்நாடு கல்வி உரிமைக் கூட்ட மைப்பு சார்பில் மாநில அளவிலான கல்வி உரிமை கோரிக்கை மாநாடு சென்னையில் நடைபெற்றது.

கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். 18 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். பொதுப் பள்ளி கல்வி முறையை உறுதி செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இம்மாநாட்டைத் தொடங்கி வைத்து, காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் என்.மார்கண்டன் பேசினார்.

கருத்துரையாற்றிய மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனை வர் வே.வசந்திதேவி பேசிய தாவது:

நாம் நீண்ட காலம் போராடிப் பெற்ற கல்வி உரிமைச் சட்டம் இன்னும் செயலளவில் நடைமுறைக்கு வரவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது. தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் பிற மாநிலங்களில் வெறும் 10 சதவீதம் அளவுக்குக்கூட சட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. உலகத்திலேயே கல்விக்கான நிதியை குறைவாக ஒதுக்கீடு செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று கூறினார்.

கல்வி உரிமைக் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் அம்பரிஷ் ராய், தமிழ்நாடு கல்வி உரிமைக் கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் க.மூர்த்தி, யுனிசெப் கல்வி நிபுணர் அருணாரத்னம், தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் செல்ல.செல்வகுமார், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுச் செயலாளர் இரா.தாஸ், பங்கேற்பு உரிமைக்கான குழந்தைகள் இயக்கங்களின் கூட்டமைப்பு மாநில செயலாளர் எம்.சிவரஞ்சனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x