

பெண் உரிமை, சமதர்மம் ஆகியன திமுகவின் அடிப்படை கோட்பாடு கள் என திமுக பொருளாளரும் இளைஞர் அணி செயலாளருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.
கோவை, திருச்சி சாலையில் திமுக மகளிர் அணி சார்பில் நேற்று நடைபெற்ற மகளிர் தின நிறைவு விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியது:
திமுகவில் உள்ள மகளிர் அணி யின் செயல்பாடுகள், இளைஞர் அணியைப் போன்று முதலிடத்துக்கு வர வேண்டும். இதை மகளிர் அணி செயலாளர் கனிமொழி நிகழ்த்திக் காட்ட வேண்டும். அதற்காக எவ்வித ஒத்துழைப்பும் வழங்கத் தயாராக இருக்கிறேன்.
மகளிருக்கான உரிமையை நிலைநாட்டிய பொறுப்பு திமுக வுக்கு உள்ளது. பெண்கள் முன்னேற் றத்துக்கு முக்கியமான சொத்தில் பாதி உரிமை, வேலைவாய்ப்பு உரிமை, ஆரம்பப் பள்ளியில் கட்டாய பெண் ஆசிரியர்கள் நியமனம், உள்ளாட்சியில் பெண் களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு, விதவை மறுவாழ்வுத் திட்டம் ஆகி யன திமுக ஆட்சி காலத்தில் சட்டங்களாக கொண்டு வரப்பட்டவை.
நாட்டில் முதல்முறையாக ஒரு பெண்ணை குடியரசுத் தலைவர் ஆக்குவதற்கு முன்மொழிந்து செயலாற்றியவர் திமுக தலைவர் கருணாநிதி.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
மகளிர் அணி செயலாளர் கனிமொழி பேசியது: மகளிர் தினம் என்பது காதலர் தினத்தைப் போன்று கொண்டாடக் கூடியது அல்ல. அது, மே தினத்தைப் போன்று அனுசரிக்கக் கூடியது என்பதை அனைவரும் உணர வேண்டும். மகளிர் தினத்தில், வீட்டில் உள்ள பெண்களை மரியாதையாகவும், அன்பாகவும் நடத்தினாலே போதும். களைப்பில் இருக்கும் மனைவிக்கு காபி போட்டுக் கொடுங்கள். இந்த அன்பை, பரிசுப் பொருட் களைக் காட்டிலும் மேலாக உணர் வார்கள்.
இன்றைய காலகட்டத்தில் பெண்ணுரிமை என்பது அது ஆணின் உரிமைக்குள் அடங்கி யுள்ளது. இந்த நாட்டில் பெண்ணாகப் பிறக்கும் உரிமை கூட இல்லை என்பதுதான் வேதனையான விஷயம். பாலியல் வன்கொடுமை என்பது ஒரு சமூகத்தின் பிரதிபலிப்பைக் காட்டுகிறது.
பல நூற்றாண்டுகளாக பெண்கள் மீது ஆண்கள் ஆதிக்கம் தொடர்ந்து இருந்து வருவதால் சுய உரிமை என்பதே உணர முடியாத நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர். கல் உடைக்கும் பெண்கள் முதல் கார்ப்பரேட் பெண்கள் வரை ஆண்களுக்கு நிகரான ஊதியம் என்பது இல்லை. இந்நிலை மாற வேண்டும் என்றார். விழாவில், திமுக துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், மனித உரிமை ஆர்வலர் மீனாட்சி, அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் தலைமை ஊடக அதிகாரி துர்கா நந்தினி, பெரியாரியலாளர் ஓவியா, ஸ்டெப்ஸ் பெண்கள் அமைப்பின் தலைவர் டி.ஷரிஃபா கானம் ஆகியோர் பேசினர்.