Published : 29 Mar 2015 12:32 PM
Last Updated : 29 Mar 2015 12:32 PM

புறாவால் குஜராத் போலீஸில் பரபரப்பு

குஜராத்தில் புறா ஒன்று போலீஸ்காரர்களை நடுநடுங்க வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாதம் 20-ம் தேதி குஜராத்தின் சலயா எஸ்ஸார் துறை முகத்தில் புறா ஒன்று நீர் அருந்திக் கொண்டிருந்தது. அதனுடைய ஒரு காலில் சிறிய வளையம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது. இன்னொரு காலில் குட்டி 'சிப்' போன்ற ஒரு பொருள் பொருத்தப்பட்டிருந்தது.

குஜராத்தில் தீவிரவாதத் தாக்கு தல் நடத்துவதற்காக இந்தப் புறா உளவு பார்க்க அனுப்பப்பட்டி ருக்கலாம் என்று கருதிய போலீஸார், மத்திய பாதுகாப்புத் துறைகளின் உதவியை நாடினர்.

தடயவியல் ஆய்வகத்தில் அந்தப் புறாவை பரிசோதித்த போது, அந்த 'சிப்' போன்ற பொருளில் 'பெஞ்சிங் துவால்' என்று எழுதப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். மேலும், 28733 என்ற எண்ணும் பொறிக்கப்பட்டி ருந்ததையும் கண்டுபிடித்தனர்.

இந்தப் புறா சீனாவில் இருந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. காரணம், அங்கு நடைபெறும் புறாக் களுக்கான போட்டியில் இந்தப் புறா கலந்துகொண்டிருக்கலாம் என்றும் இப்படியான புறாக்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்போது ஏதேனும் கப்பலில் இருந்து அது தப்பித்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். குடிநீரைத் தேடி குஜராத் துறைமுகத்தில் இறங்கியி ருக்கலாம் என்றும் தடயவியல் நிபுணர்கள் விளக்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x