Published : 23 Mar 2015 08:22 AM
Last Updated : 23 Mar 2015 08:22 AM

அரசு, ரிசர்வ் வங்கி இடையே கருத்து வேறுபாடு இல்லை

அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். மேலும் ரிசர்வ் வங்கி குறைத்திருக்கும் வட்டி விகிதங்களை மற்ற வங்கிகளும் பின்பற்றும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கியின் இயக்குநர் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜேட்லி இவ்வாறு தெரிவித்தார். மேலும் அரசு தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் தொடர்பில் உள்ளது, ரிசர்வ் வங்கியின் கருத்துகள் மற்றும் ஆலோசனையை அரசு ஏற்றுக்கொள்கிறது என்றார் ஜேட்லி.

சூழ்நிலைகளை வெளிப்படை யாக விவாதித்துக்கொள்கிறோம். அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் கருத்துவேறுபாடு என்ற கேள் விக்கே இடமில்லை. இதனை பலமுறை செய்தியாளர்களிடம் தெளிவுபடுத்தியிருக்கிறேன் என்று ஜேட்லி தெரிவித்தார். அரசு பத்திரங்களை ஒழுங்குமுறை செய்யும் அதிகாரத்தை ரிசர்வ் வங்கியிடமிருந்து பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்துக்கு மாற்றுவதாக பட்ஜெட்டில் அறிவித்தார். இந்த நிதி மசோதா நாடாளுமன்றத்தில் இருக்கிறது. சில விஷயங்களை நாங்கள் ஏற்கெனவே விவாதித்தோம். சில விஷயங்கள் குறித்து தற்போது கூட விவாதித்து வருகிறோம். அது பற்றி இப்போது ஏதும் கருத்து தெரிவிக்க முடியாது என்று ஜேட்லி தெரிவித்தார்.

மேலும் அரசாங்கமும் ரிசர்வ் வங்கியும் தொடர்ந்து கலந்து ஆலோசித்து வருகிறோம். பட்ஜெட் டுக்கு முன்பு விவாதித்தோம், அதன் பிறகும் விவாதித்தோம் என்றார். வங்கி வட்டி விகிதத்தை குறைக்க மத்திய அரசு அழுத்தம் கொடுக்குமா என்று கேட்டதற்கு, அரசாங்கம் எந்த அழுத்தமும் கொடுக்காது ஆனால் வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்கும் என்று நம்புவதாக தெரிவித்தார். வட்டி விகிதம் குறைய வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது, வங்கிகள் அதனை செய்யும் என் நம்புவதாக கூறினார்.

வட்டி விகிதம் குறைப்பு பற்றி ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் பேசும்போது ‘பணவீக்கம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்தே முடிவு செய்ய முடியும். மேலும் பருவமழை மற்றும் விலை நிலவரங்களை ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது,’ என்றார். மேலும் சர்வதேச சூழலையும் கவனித்து வருகிறோம்.

சர்வதேச சூழ்நிலை நம்கையில் இல்லை. ஆனால் உள்நாட்டில் நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த் துவதற்கு இன்னும் சில காலம் எடுத்துக்கொள்ளலாம். ஆனாலும் அது நமக்கு முக்கியமான பிரச்சி னையாக இருக்காது என்றார். தற்போதைய வட்டி குறைப்பு எப்படி பணவீக்கத்தில் எதிரொலிக்கிறது என்பதை கவனிக்க வேண்டும் என்றார். நிதிப் பற்றாக்குறை பற்றி பேசிய ராஜன், அரசாங்கம் இதனை கட்டுப்படுத்த பல நடவடிக் கைகள் எடுத்திருக்கிறது. அவை சூழ்நிலைகளை பொறுத்து இருக்கும். உதாரணத்துக்கு பொதுத் துறை நிறுவனங்களில் பங்கு விலக்கல் என்பது சந்தை நிலவரத்தை பொறுத்தே வெற்றி அடையும். மாநில அரசுகளும் இதில் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில் ரகுராம் ராஜன், 4 துணை கவர்னர்கள், நிதி அமைச்சக நியமனங்கள் மற்றும் துறை வல்லுநர்கள் உள்பட 17 நபர்கள் இருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x