Published : 18 Mar 2015 12:43 PM
Last Updated : 18 Mar 2015 12:43 PM
மியாவ் மியாவ் எனக் கத்திக்கொண்டே போகும் சிறிய பூனைக் குட்டிகளை உங்களுக்குப் பிடிக்கும் இல்லையா? அதைப் போன்ற ஒரு குட்டிப் பூனையைச் செய்வோமா?
தேவையான பொருள்கள்:
தடித்த அட்டை போன்ற காகிதம் ஒரு துண்டு, கறுப்பு, சிவப்பு ஸ்கெட்ச் பேனா, சிறிதளவு பஞ்சு, தேங்காய் நார், பசை.
செய்முறை:
1 தடித்த அட்டை காகிதத்தில், மேல் பகுதியில் ஒரு சிறு வட்டமும், கீழ்ப் பகுதியில் ஒரு பெரிய வட்டமும் படத்தில் காட்டியுள்ளதைப் போல் வரைந்துகொள்ளுங்கள். சிறிய வட்டம் பூனையின் முகம், பெரிய வட்டம் பூனையின் உடம்பு, சரியா?
2 படத்தில் காட்டியுள்ளது போல, பூனையின் கண்கள், காதுகள், வாய், வால் போன்றவற்றை வரைந்துகொள்ளுங்கள்.
3 பசை உதவியுடன் பூனையின் உடம்பு, முகம் ஆகியவற்றின் மீது பஞ்சை ஒட்டிக்கொள்ளுங்கள். கண்களையும், வாயையும் மட்டும் விட்டுவிடுங்கள்.
4 வாயின் இரு புறங்களிலும் தேங்காய் நார் மூலம் மீசையை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
இப்போது உங்களிடம் அழகான மிருதுவான பூனைக் குட்டி ஒன்று கிடைத்துவிட்டதா? அதை வைத்து உற்சாகமாக விளையாடுங்கள்.