

தமிழகம் முழுவதும் விடைத்தாள் திருத்தும் பணியை முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒருமணி நேரம் புறக்கணித்தனர்.
பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவ, மாணவிகள் காப்பி அடிக்காமல் தடுக்க தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
வாட்ஸ் அப் மூலம் வினாத்தாள் வெளியான விவகாரத்திற்கு பிறகு தேர்வுத்துறை கண்காணிப்பு பணியில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் படி மாணவர்கள் காப்பியடித்தால் அந்த மைய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை தற்காலிக பணிநீக்கம் மற்றும் ஊதிய நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு தேர்வுகள் துறை இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து ஆசிரியர்கள் இந்த புறக்கணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும், தேர்வறையில் மாணவர்கள் காப்பி அடித்ததற்காக பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை உடனடியாக பணியில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்றும் முதுகலை பட்டதாரிகள் ஆசிரியர் சங்கம் தரப்பில் கோரிக்கை விடுத்தனர்.
தமிழ்நாடு தேர்வுகள் துறை இயக்குநரகத்தின் உத்தரவைத் திரும்ப பெற வலியுறுத்தி, சென்னை, மதுரை, கோவை, புதுக்கோட்டை, ஈரோடு என தமிழகம் முழுவதும் இன்று
ஒருமணி நேரம் விடைத்தாள் திருத்தும் பணியை முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் புறக்கணித்தனர்.