Last Updated : 30 Mar, 2015 09:04 AM

 

Published : 30 Mar 2015 09:04 AM
Last Updated : 30 Mar 2015 09:04 AM

இருசக்கர வாகனங்கள் அதிகரிப்பதால் மாநகர பஸ்களில் குறையும் பயணிகளின் எண்ணிக்கை

சென்னையில் இருசக்கர வாகனங்கள் அதிகரித்து வரும் நிலையில் மாநகர பஸ்களைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

சென்னை மாநகரப் போக்கு வரத்துக் கழகம், சென்னையில் மட்டுமின்றி, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் பஸ்களை இயக்கி வருகிறது. நாட்டிலேயே சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக பஸ்களில்தான் மொத்த கொள் ளளவில் 82 சதவீதம் பேர் தினசரி பயணம் செய்யும் நிலை இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டு களாக மாநகர பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை படிப் படியாகக் குறைந்து வருகிறது. அது மொத்தக் கொள்ளளவில் 75 சதவீதமாகக் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த 2010-2011 நிதியாண்டில் சென்னை மாநகரில் மொத்த பஸ்களின் எண்ணிக்கை 3421 ஆக இருந்தது. அப்போது, தினசரி 55.19 லட்சம் பயணிகள் சராசரியாக பஸ்களில் பயணம் செய்தனர். ஆனால், அதன்பிறகு பயணிகளின் எண்ணிக்கை படிப் படியாகக் குறையத் தொடங்கியது. தற்போது, 100 சிறிய பஸ்களை யும் சேர்த்து சென்னையில் மொத்த பஸ்களின் எண்ணிக்கை 3,800 ஆக உள்ளது. ஆனால் பயணி களின் எண்ணிக்கை 51.84 லட்சமாக குறைந்துள்ளது.

காரணம் என்ன?

இத்தகைய மாற்றத்துக்கு, மாநகரப் போக்குவரத்துக் கழகத் தின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகள் காரணமா என மாநகரப் போக்குவரத்துக் கழக உயரதிகாரிகளைக் கேட்டோம். அப்போது அவர்கள் கூறியதாவது: கடந்த 2011-ம் ஆண்டில் தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது இருந்து மாநகர பஸ்ஸில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இது தவிர, சென்னையில் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட தனியார் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது பயணி களின் எண்ணிக்கை குறைந்ததற்கு முக்கிய காரணம். மேலும், ஷேர் ஆட்டோக்களில் அதிகம் பேர் பயணம் செய்வதும் பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதற்கு முக்கிய காரணமாகும்.

எனினும், தற்போது, மாநகர பஸ்களில் பயணிகளின் எண் ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி யிருக்கிறது. இதற்கு சிறிய பஸ் களும் ஒரு முக்கிய காரணமாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழகத்தில் ஓடும் வாகனங் களில் 24 சதவீத வாகனங்கள் சென்னையில்தான் (44 லட்சம்) ஓடுகின்றன. “இங்கு பொதுப் போக்குவரத்து சரியான முறையில் ஒருங்கிணைக்கப்படாததுதான் இதற்கு முக்கிய காரணம். ரயில் நிலையங்களில் இருந்து அருகில் உள்ள முக்கிய இடங்களுக்குச் செல்வதற்குப் போதிய பஸ் வசதி இல்லாமை, நகரின் உட்புறப் பகுதி களுக்குப் போதிய அளவில் பொதுப் போக்குவரத்து இல் லாமை போன்ற காரணங்களால் மக்கள், தனியார் வாகனங்களை நாடுகின்றனர். முறையாக திட்ட மிட்டு, பொதுப் போக்குவரத்து வசதிகளை சீரான வகையில் அதிகரித்தால், தனியார் வாகனங் களை விடுத்து பொதுப் போக்கு வரத்து வசதிகளைத் தேடி மக்கள் வருவார்கள். பாதசரிகளுக்கு தடைகளற்ற நடைபாதை வசதி யும், சைக்கிள்களுக்குத் தனிப் பாதையும் அமைத்துக் கொடுப் பதும் வாகன நெரிசலைக் குறைக் கும்” என்று தமிழக சாலை பாது காப்புக் கொள்கையை வகுத்துக் கொடுத்த குழுவின் தலைவரும், போக்குவரத்து ஆலோசனைக் கூட்டமைப்புத் தலைவருமான என்.எஸ்.சீனவாசன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x