Published : 05 Mar 2015 10:02 AM
Last Updated : 05 Mar 2015 10:02 AM

அமெரிக்க இளம் பெண்ணுக்கு பித்தப்பை அறுவை சிகிச்சை: அரசு பொது மருத்துவமனையில் நடந்தது

அரசு பொது மருத்துவமனையில் அமெரிக்க இளம் பெண்ணுக்கு பித்தப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அமெரிக்காவை சேர்ந்தவர் இளம் பெண் நாடிலி டி.காரிசன் (20). சென்னைக்கு சுற்றுலா வந்த பெண்ணுக்கு திடீரென கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 18-ம் தேதி தன்னுடைய நண்பர் விக்ரம் என்பவரின் உதவியுடன் தனியார் மருத்துவமனைக்கு சென்றார். பரிசோதனை செய்து பார்த்ததில், பித்தப்பையில் கல் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதற்கு பணம் இல்லாததால், 26-ம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சென்றார்.

டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், பித்தப்பையில் தொற்று பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் குழுவினர் லேப்ராஸ்கோப்பி மூலம் அறுவைச் சிகிச்சை செய்து தொற்று பரவியிருந்த பித்தப்பையை அகற்றினர். இந்த சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை குணமடைந்த இளம் பெண்ணை, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று சென்று நலம் விசாரித்தார். அப்போது மருத்துவமனை டீன் டாக்டர் விமலா, மருத்துவ துணை கண்காணிப்பாளர் டகடர் ரகுநந்தன், அறுவை சிகிச்சை டாக்டர்கள் சந்திரசேகர், கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x