

தமிழகத்தில் நடைபெறும் காச நோய் கட்டுப்பாட்டு திட்டப் பணி யாளர்கள் நியமனங்கள் அனைத் தும், அந்த நியமனங்களில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தாக்க லான மனு மீதான இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டவை என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
தஞ்சாவூர் பாபநாசம் வட்டம் மகிமலையை சேர்ந்த வி.தியாகு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
தேசிய ஊரக சுகாதார மிஷன் என்ற பெயரில் நாடு முழுவதும் காசநோய் தடுப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப் பாட்டு திட்டம் என்ற பெயரில் இத்திட்டம் அமலில் உள்ளது. இத்திட்டத்தின்கீழ் ஆய்வக தொழில்நுட்பவியலர் உள்ளிட்ட 660 பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த ஆண்டு செப். 10-ல் அறிவிப்பு வெளி யிடப்பட்டது. நான் ஆய்வக தொழில்நுட்பவியலர் பணிக்கு விண்ணப்பித்தேன். ஆனால் இன்றுவரை எனக்கு எழுத்துத் தேர்வு தொடர்பாக அழைப்புக் கடிதம் வரவில்லை.
தமிழகத்தில் இத்திட்டத்தில் 660 பணியாளர்களை தேர்வு செய்வதில் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படவில்லை. விண்ணப்பத்தில்கூட விண்ணப்பதாரர் எந்த ஜாதியை சேர்ந்தவர் எனக் கேட்கப்படவில்லை. எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளனர். இது சட்டவிரோதம், அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது.
தேசிய காசநோய் தடுப்பு திட்டம் நாடு முழுவதும் அமலில் உள்ளது. மற்ற மாநிலங்களில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அதன்படி தமிழகத்தில் 660 பணியிடங்களில், 117 பணியிடங் கள் பட்டியல் பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும். எனவே, காச நோய் கட்டுப்பாட்டு திட்டப் பணி யாளர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்து, இட ஒதுக்கீடு வழங்கி பணியிடங் களை நிரப்ப உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந் திரபாபு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் லஜபதிராய் வாதிட்டார். விசாரணைக்கு பின், காசநோய் கட்டுப்பாட்டு திட்டப் பணியாளர் நியமனங்கள் அனைத்தும், இந்த மனு மீதான இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டவை என நீதிபதி உத்தரவிட்டார். மனுவுக்கு பதிலளிக்க மத்திய சுகாதாரத் துறை செயலர், தமிழக சுகாதாரத் துறை செயலர், தேசிய ஊரக சுகாதார மிஷன் திட்ட இயக் குநர், தமிழக காசநோய் கட்டுப்பாட்டு திட்ட அதிகாரி ஆகியோ ருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.