

அரசு வேலைவாய்ப்பு குறைந்து விட்ட நிலையில், தனியார் வேலைவாய்ப்புகள் குறித்து பதிவுதாரர்களுக்கு செல்போன் எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் மூலம் உடனடியாக தகவல் தெரிவிக்க வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 32 மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும், சென்னை மற்றும் மதுரையில் மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இயங்கி வருகின்றன. இவை தவிர சென்னையில் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகம், தொழில்நுட்ப வேலை வாய்ப்பு அலுவலகம் உள்ளிட்ட சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்களும் தனியாக உள்ளன.
பட்டப் படிப்பு வரையிலான கல்வித்தகுதியை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலும், முதுகலை கல்வித் தகுதியையும், மருத்துவம், பொறியியல், விவசாயம் போன்ற தொழில்கல்வி படிப்புகளுக் கான கல்வித்தகுதியை மாநில தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத் திலும் பதிவுசெய்ய வேண்டும். அரசு வேலை வேண்டி வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்திருப் போரின் எண்ணிக்கை 84 லட்சத்தை தாண்டிவிட்டது.
செல்போன் எண், இ-மெயில்
இதற்கிடையே, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, வேலைவாய்ப்பு பதிவுமூப்பு (சீனியா ரிட்டி) முறையிலான பணிநியமனம் நிறுத்தப்பட்டுவிட்டது. அரசு போக்குவரத்துக்கழகம், உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கு தற்போது அனைவரும் விண்ணப்பிக் கும் வகையில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பணியின் தன்மைக்கேற்ப எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் பணிநியமனம் செய் வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
அரசு பணிகளுக்குப் பதிவுமூப்பு முறை இல்லாத நிலையில், தனியார் வேலைவாய்ப்புகள் மீது கவனம் செலுத்த வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை முடிவுசெய்துள்ளது. எனவே, தற்போது தனியாருடன் இணைந்து மாவட்ட அளவில் அதிகப்படியான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகிறது. இந்த நிலையில், தனியார் வேலைவாய்ப்பு கள் குறித்து பதிவுதாரர்களுக்கு உடனடியாகவும், விரைவாகவும் தகவல் தெரிவிக்க வசதியாக அவர்களின் செல்போன் எண், இ-மெயில் முகவரி விவரங்களை சேகரிக்குமாறு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அத்துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வேலைவாய்ப்பு பதிவை புதுப் பிக்கும்போது ஆன்லைன் சேவை யைப் பயன்படுத்துவதைப் போன்று செல்போன் எண், இ-மெயில் முகவரி ஆகிய விவரங்களை ஆன்லைனி லேயே பதிவேற்றம் செய்துகொள் ளலாம். அவ்வாறு செய்ய இயலாதவர் கள் வேலைவாய்ப்பு அலுவலகத் துக்கு நேரடியாகச் சென்றும் அந்த விவரங்களை சேர்த்துக் கொள்ளலாம் என்றும் அந்த அதிகாரி கூறினார்.