சென்னையில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு: வெளிநாட்டினர் அதிகளவில் பங்கேற்க அமைச்சர் அழைப்பு

சென்னையில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு: வெளிநாட்டினர் அதிகளவில் பங்கேற்க அமைச்சர் அழைப்பு
Updated on
1 min read

சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட் டில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்கேற்ற வேண்டும் என்று தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பி.மோகன் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் சர்வதேச முதலீடு மற்றும் இணை வாக்கம் குறித்து, சர்வதேச தூதரகங்களின் அதிகாரிகளுட னான கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இக்கூட்டத்துக்கு தமிழக ஊரக தொழில்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பி.மோகன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், 15 நாடுகளின் தூதரக அதிகாரிகள் பங்கேற்றனர்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள தொலைநோக்குத் திட்டம் ‘விஷன் 2023’ சிறப்பம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் அமைச்சர் பி.மோகன் எடுத்து ரைத்தார். மேலும், சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச முத லீட்டாளர்கள் மாநாட்டில் வெளி நாட்டு முதலீட்டாளர்கள் அதிக ளவில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு மில்லியன் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்கள் ஆறாயிரம் வகையான பொருட்களை உற் பத்தி செய்கின்றன. இதன் மூலம் 5 மில்லியன் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்து வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலாளர் குமார் ஜெயந்த், தமிழக அரசின் தொழில்துறை ஆணையர் மற்றும் தமிழக சிறுதொழில் வளர்ச்சி நிறுவன மேலாண்மை இயக்குநர் ஜக்மோகன் சிங் ராஜூ உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in