Published : 10 Mar 2015 12:33 pm

Updated : 10 Mar 2015 13:27 pm

 

Published : 10 Mar 2015 12:33 PM
Last Updated : 10 Mar 2015 01:27 PM

ஒமர் அப்துல்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஒமர் அப்துல்லா இன்று தனது 44-வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார்.

அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த வாழ்த்து செய்தியில், "உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியத்துடனும் நலன்களுடனும் வாழ வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர்ஒமர் அப்துல்லாபிரதமர் மோடி

You May Like

More From This Category

More From this Author