Published : 19 Mar 2015 08:30 AM
Last Updated : 19 Mar 2015 08:30 AM

11.23 லட்சம் பேர் எழுதுகின்றனர்: எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது - முறைகேடுகளைத் தடுக்க 5,200 பறக்கும் படைகள்

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் 11.23 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். காப்பி அடிப்பதை தடுக்க 5,200-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பிளஸ் டூ தேர்வு கடந்த 5-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 31-ம் தேதி இந்தத் தேர்வு முடிவடைகிறது.

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தமிழகத்தில் 50 ஆயிரத்து 429 தனித்தேர்வர்கள் உட்பட மொத்தம் 11 லட்சத்து 23 ஆயிரத்து 120 பேர் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக 3,298 மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

சென்னையில் 209 மையங் களில் 57 ஆயிரம் பேரும், புதுச்சேரியில் 48 மையங்களில் 19 ஆயிரம் பேரும் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வை எழுதுகின்றனர். சென்னை புழல், கோவை, மதுரை மத்திய சிறைகளில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தேர்வு மையங்களில் 249 கைதிகள் தேர்வெழுத அனுமதிக் கப்பட்டுள்ளனர். எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதுவோரில் 7.30 லட்சம் பேர் தமிழ்வழியில் படிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வு, காலை 9.15 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணிக்கு முடிவடையும். காலை 9.15 முதல் 9.25 வரை வினாத்தாளை படித்துப் பார்ப்பதற்கும், 9.25 முதல் 9.30 வரை விடைத் தாளில் விவரங்களை சரிபார்த்துக் கொள்வதற்கும் நேரம் அளிக்கப் படும்.

கற்றல் குறைபாடு உடை யவர்கள், பார்வையற்றோர், காது கேளாதோர், வாய் பேசாதோர் உள்ளிட்ட மாற்றுத் திறனாளி களுக்கு தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் கொடுக்கப்படும். அவர்கள் தேர்வெழுத உதவி யாளர் இருப்பர்.

5,200 பறக்கும் படைகள்

தேர்வு மையங்களில் காப்பி அடிப்பது, பிட் அடிப்பது உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 5,200-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமை யிலான தனி பறக்கும் படை யினரும் தேர்வு மையங்களுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொள்வர். தேர்வறைகளில் இருக்கை வசதி, மாணவர்களின் பதிவு எண்ணை குறிப்பிடுவது, மாற்றுத் திறனாளிகளுக்கு தனி அறைகள் ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகள் தேர்வு மையங்களில் நேற்று மும்முரமாக மேற்கொள் ளப்பட்டன. எஸ்எஸ்எல்சி தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் இருப்பதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x