Published : 03 Mar 2015 09:21 AM
Last Updated : 03 Mar 2015 09:21 AM

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தொடங்கின: தமிழகத்தில் 46 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாடு முழுவதும் நேற்று தொடங்கின. தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ஏறத்தாழ 30 ஆயிரம் பேரும், 12-ம் வகுப்புத் தேர்வை 16 ஆயிரம் பேரும் எழுதினர். சென்னையில் 72 மையங்களில் நடந்த தேர்வில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், கோவா ஆகிய மாநிலங்களையும் புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், டாமன்-டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மாணவ-மாணவிகளும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 30 ஆயிரம் பேரும் கலந்துகொள்வதாக சிபி எஸ்இ சென்னை மண்டல அதிகாரி டி.டி.சுதர்சன் ராவ் தெரிவித்தார்.

சிபிஎஸ்இ-யைப் பொருத்த வரையில், மாநில பாடத்திட்டம் போன்று அல்லாமல் விருப்பப்படும் மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வை பொதுத்தேர்வாக இல்லாமல் பள்ளி அளவிலான தேர்வாகவும் எழுதிக்கொள்ளலாம். பள்ளி அளவிலான தேர்வு வருகிற 10-ம் தேதி தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x