Published : 24 Mar 2015 09:59 am

Updated : 24 Mar 2015 09:59 am

 

Published : 24 Mar 2015 09:59 AM
Last Updated : 24 Mar 2015 09:59 AM

கடன் கோரும் நிறுவனங்களை மதிப்பீடு செய்யும் பணியை தனியாருக்குத் தர வேண்டாம்: வங்கிகளுக்கு ஆர்பிஐ துணை கவர்னர் எச்சரிக்கை

கடன் கோரும் நிறுவனங்கள் குறித்த மதிப்பீடு செய்யும் பணியை தனியார் நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டாம் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாராக்கடன் அளவு அதிகரித்து வருவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர்களில் ஒருவரான எஸ்.எஸ். முந்த்ரா தெரிவித்தார். தலைநகர் டெல்லியில் நேற்று அசோசேம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பேசிய அவர் மேலும் கூறியது:

வங்கிகள் எத்தகைய பணி களையும் வெளிப்பணி அளிப்பு அடிப்படையில் மேற்கொள்வதை ரிசர்வ் வங்கி வரவேற்கிறது. அதேசமயம் கடன் கோரும் நிறுவனங்களின் திருப்பித் தரும் திறனை மதிப்பீடு செய்வதை தனியாரிடம் அளிப்பதை ஏற்க முடியாது. மிகவும் முக்கியமான இந்தப் பணியை தனியார் நிறுவ னங்களுக்கு அளிக்கக் கூடாது என்று குறிப்பிட்டார்.

கடன் கோரும் நிறுவனங்களை தனியாரிடம் விட்டதால்தான் இப்போதைய சூழ்நிலைக்கு வங்கிகள் தள்ளப்பட்டுள்ளன என்றார்.

ரிசர்வ் வங்கியிடம் உள்ள விவரத்தின் அடிப்படையில் டிசம்பர் 2014 வரை வங்கிகளின் வாராக் கடன் அளவு ரூ. 2,60,531 கோடியாகும். ரூ.10 கோடியும் அதற்கும் மேலான தொகை பெற்றவர்களின் எண்ணிக்கை 2,897 ஆகும். ரூ. 10 கோடிக்கு மேலான தொகை பெற்றவர்கள் மொத்தம் திரும்ப செலுத்த வேண்டிய தொகை ரூ. 1.60 லட்சம் கோடியாக உள்ளது.

கடனை திரும்ப செலுத்து வதற்கு போதிய நிதி வளம் இருந்தும் வேண்டுமென்றே செலுத்தாமலிருக்கும் வாடிக்கை யாளர்களைக் கண்டறிந்து `வில்ஃபுல் டிபால்டர்’ என அறிவிப்பதன் மூலம் கடனை வசூலிப்பதற்கான நடவடிக் கைகளை விரைந்து மேற்கொள்ள முடியும். வங்கிகளில் செயல் படுத்தாமல் உள்ள வங்கிக் கணக்குகள் வங்கிகளின் செயல்பாட்டையே பின்னுக்கு இழுத்துவிடும். வாராக்கடன் அதிகரிப்பால் வங்கிகள் எத்தகைய நிலைக்குத் தள்ளப்படும் என்பதற்கு இப்போதைய நிலையே சிறந்த உதாரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

கடன் கோரும் நிறுவனங்களின் நம்பகத் தன்மையை உடனடியாக மதிப்பீடு செய்வதோடு, தகுதியற்ற வர்களை உடனடியாக நீக்கிவிட வேண்டும். அப்போதுதான் வங்கிகள் அளித்த கடனைத் திரும்பப் பெறும் அளவு அதிகரிக்கும் என்று அவர் கூறினார். கடனை வசூலிப்பதில் பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப் படுகின்றன. இதில் ஒன்றுதான் மோசடி நிறுவனங்கள் குறித்த பதிவேட்டை தயாரிப்பதாகும். இதன் மூலம் வங்கிகளை ஏமாற்றும் நிறுவனங்கள் பற்றிய தகவல் உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளப்படும்.

ஏற்கெனவே ரிசர்வ் வங்கி யும், இந்திய வங்கியாளர் சங்கமும் இணைந்து `எச்சரிக் கை ஆலோசனைகள்’ என்ற பெயரில் தகவல்களை வங்கி களுக்கு அளிக்கின்றன என்றும் முந்த்ரா குறிப்பிட்டார். இது தவிர, வில்ஃபுல் டிபால்டர் நிறுவனங்களைக் கண்டறிந்து அத்தகைய நிறுவனங்களுக்கு வங்கிச் சேவை கிடைப்பதை முற்றிலுமாக தடை விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

ஒரு குறிப்பிட்ட துறைக்கு மட்டும் கடன் வழங்குவதில் வங்கிகள் அதிக ஆர்வம் காட்டக்கூடாது. கடன் வழங்குவதற்கு முன்பு அத்தகைய நிறுவனங்களின் தகுதியை மதிப்பீடு செய்ய வேண்டும் என்றார்.

சன்ரைஸ் செக்டார் எனப்படும் புத்தாக்க நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் அளிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதைப் பார்த்திருக்கிறேன். ஒரு வங்கி அளித்தவுடன் அனைத்து வங்கிகளும் அத்துறைக்கு கடன் அளிக்க ஆர்வம் காட்டும் என்றார்.

பருவநிலை தவறிய மழை மற்றும் சூறாவளி ஆகியவற்றால் வட மாநிலங்கள் பாதிக்கப்பட்ட போதிலும் இதன் தாக்கம் பணவீக்கத்தில் எந்த அளவுக்கு இருக்கும் என்பது இதுவரை மதிப்பீடு செய்யப்படவில்லை என்றார்.

வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காகத்தான் சிஆர்ஆர் விகிதத்தை (வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைக்கும் வைப்புத் தொகை) ரிசர்வ் வங்கி குறைத்துள்ளதா? என்று கேட்டதற்கு பேரியல் பொருளாதார சூழலில் இதுவெல்லாம் சகஜமான ஒன்றுதான் என்றார்.

கடன் பெறும் நிறுவனங்கள் சில, தாங்கள் எந்த நோக்கத்துக்காக கடன் பெற்றனரோ அதற்குப் பயன்படுத்தாமல் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்வதாக அவர் சுட்டிக் காட்டினார்.

தங்களது நிதிநிலை அறிக் கையை சிறப்பாக்க இதுபோன்ற நடவடிக்கைகளை சில நிறுவ னங்கள் எடுக்கின்றன. ஆனால் இது பெரும்பாலும் தோல்வியிலேயே முடிந்துள்ளதாக அவர் கூறினார்.

சமீபத்தில் சில நிறுவனங்களில் நடத்திய தணிக்கையில் இந்த விவரங்கள் வெளியானதாகவும் முந்த்ரா சுட்டிக் காட்டினார்.

வங்கிகள்ஆர்பிஐதுணை கவர்னர்எச்சரிக்கை

You May Like

More From This Category

More From this Author