

உளுந்தூர்பேட்டை அருகே குளத் தில் குளிக்கச் சென்ற 4 மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துலட்சுமி (50). இவர், நேற்று பிற்பகலில் அங்குள்ள பொதுக்குளத்தில் குளிக்கச் சென்றார். அவருடன் உறவினருடைய குழந்தைகளான மாயன் என்பவரின் மகள் 7-ம் வகுப்பு படித்து வந்த நிகிதா (12), முருகேசன் என்பவருடைய மகள் துர்கா (3), ஆறுமுகம் என்பவரின் மகள் 9-ம் வகுப்பு படித்து வந்த சரண்யா (14) மற்றும் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வீரப்பெருமாள் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த நட்டுக் கண்ணன் என்பவரின் மகள் 11-ம் வகுப்பு படித்து வந்த ராஜேஸ் வரி (17) ஆகிய 4 பேரும் சென்றனர்.
முத்துலட்சுமி துணி துவைத்துக் கொண்டு இருந்தபோது, மாணவி கள் 4 பேரும் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென நிகிதாவை காணவில்லை. அதனால், அதிர்ச்சியடைந்த மற்ற 4 பேரும் அவரைத் தேடினர். ஆனால், முத்துலட்சுமி தவிர மற்ற 3 பேருக்கும் நீச்சல் தெரியாததால் அவர்களும் நீரில் மூழ்கினர். இதையடுத்து, 4 பேரையும் முத்துலட்சுமி தேடினார். அவர்கள் கிடைக்கவில்லை. எனவே, அக்கம்பக்கம் இருந்தவர்களிடம் கூறினார்.
அவர்கள் விரைந்து வந்து குளத்தில் தேடியபோது நிகிதா, துர்கா, ராஜேஸ்வரி ஆகிய 3 பேரும் பிணமாக மீட்கப்படடனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சரண்யா மீட்கப் பட்டார். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அவரை கொண்டு சென்ற போது வழியிலேயே உயிரிழந்தார். இதையடுத்து மாணவிகள் 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டன. இது குறித்து உளுந்தூர் பேட்டை டிஎஸ்பி சங்கர், வட்டாட் சியர் ராஜராஜன் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்துக்கு உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ குமரகுரு ஆறுதல் கூறினர்.