

அம்மா உணவகத்தை தேடுபவர்களுக்கு அதன் இருப்பிடத்தை சொல்லும் வகையில் செல்போனிலேயே ஒரு வசதி செய்யப்பட்டு விட்டது. @ammas என்று டைப் செய்து 51115 என்ற எண்ணுக்கு நீங்கள் SMS அனுப்பினாலே அருகில் உள்ள அம்மா உணவகத்தின் முகவரியை உங்கள் செல்போன் காண்பிக்கும். இந்த வசதி உள்ளூர் மொழியிலும் கிடைக்கும். txtWeb எனும் அமைப்பு தற்போது இதனை வழங்கு கிறது. இந்த சேவை தற்போது ஏர்டெல், வோடபோன், ஐடியா, டாடா டொகோமோ ஆகிய செல்போன் நிறுவனங்களில் மட்டும் கிடைக்கும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.