Published : 19 Mar 2015 10:24 AM
Last Updated : 19 Mar 2015 10:24 AM

சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் இணைந்து ‘ஏர்செல் ஒன் பிளஸ் த்ரி’ புதிய சேவை அறிமுகம்

ஏர்செல் நிறுவனம் சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் இணைந்து ‘ஏர்செல் ஒன் பிளஸ் த்ரி’ என்ற புதிய சேவையை அறிமுகப் படுத்தியுள்ளது.

இச்சேவை அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடை பெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் இர்ஃபான் பதான், ஏர்செல் நிறுவனத்தின் சென்னை மற்றும் தமிழ்நாடு வட்ட வர்த்தக வியூகப் பிரிவுத் தலைவர் கை.சங்கரநாராயணன், சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவன இயக்குநர் பி.கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு புதிய சேவையின் சின்னத்தை அறிமுகப்படுத்தினர்.

பின்னர் சங்கரநாராயணன் கூறியதாவது:

ஏர்செல் நிறுவனம் இந்திய அளவில் 8 கோடி வாடிக்கை யாளர்களையும், தமிழகத்தில் 2 கோடி வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது. 3ஜி சேவையில் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம், ஐபிஎல் கிரிக்கெட் டில் கோலோச்சி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறு வனத்துடன் இணைந்து ‘ஏர்செல் ஒன் பிளஸ் த்ரி’ சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சேவையில் ரூ.69, ரூ.109, ரூ.209 என ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். எடுத்துக்காட்டாக ரூ.69-க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.69-க்கு டாக் டைம், 69 நிமிடங் கள் ஏர்செல்லில் இருந்து ஏர்செல் எண்ணுக்கு இலவச அழைப்பு, 69 எம்பி டேட்டா ஆகியவை கிடைக்கும்.

மேலும் இந்த சேவையில் ரீசார்ஜ் செய்த பிறகு சில எளிய கேள்விகளுக்கு பதில் அளித்து வென்றால், வெல்லும் நபர், மேலும் 3 நண்பர்களுடன் சேர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரை சந்திக்கும் வாய்ப்பை பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

உலகக் கோப்பையை வெல்வோம்

நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் கூறியதாவது:

முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட இருக்கிறேன். இந்த அணியில் ஏற்கெனவே இடம்பெற்றுள்ள இந்திய அணியின் கேப்டன் தோனி, ரெய்னா, அஸ்வின் ஆகியோருடன் சர்வதேச கிரிக் கெட்டில் விளையாடிய அனு பவம் உள்ளது. அதனால் இந்த அணியில் சிறப்பாக விளையாடு வேன்.

மேலும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியிலும் இந்தியா வெற்றிபெற்று, உலகக் கோப்பையை வெல்லும். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x