மெகா வேலைவாய்ப்பு முகாம்

மெகா வேலைவாய்ப்பு முகாம்
Updated on
1 min read

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம், மண்ணிவாக்கத்தில் உள்ள பெரி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் மார்ச் 21, 22 தேதிகளில் “மெகா வேலை வாய்ப்பு முகாம்” நடைபெற்றது.

வேலைவாய்ப்பு முகாமை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆர்.கோட்டீஸ்வரன் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் கல்லூரியின் தலைவர் சரவ் பெரியசாமி பேசும்போது, “பல்வேறு நிறுவனங்களின் நிர்வாக ஆளுமைக்கு தேவையான சிறந்த மாணவ, மாணவிகளை உருவாக்கும் தொலைநோக்குடன் இக்கல்லூரி தொடங்கப்பட்டது. அடுத்த தலைமுறை இளைஞர்களை பன்னாட்டு குடிமக்களாக உயர்த்திக் காட்டும் முயற்சியில் பல்வேறு பாடப் பிரிவுகளிலும், துறைகளிலும் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.

முகாமில் முன்னணி தொழில் நிறுவனங்களான இன்ஃபோசிஸ், ஐபிஎம், ஹெச்.சி.எல். உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங் கள் பங்கேற்றன.

கல்லூரி வேலைவாய்ப்பு அதிகாரி சி.டி.ராஜகணபதி, கல்லூரி முதல்வர் ஆர்.கவுசல்யா தேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in