

சென்னையில் பன்றி காய்ச் சலுக்கு 2 வயது குழந்தை நேற்று உயிரிழந்தது.
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கலீல், ஹரிஷா தம்பதி யின் 2 வயது மகனான முகமது கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அதை தொடர்ந்து கடந்த பத்து தினங்களுக்கு முன்பு சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித் துள்ளனர்.
அங்கு முகமதுக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. முகமதுவின் பெற்றோர், குழந்தையை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கேட்டதாகவும், ஆனால் மருத்துவர்கள் தாங்களே குணப்படுத்திவிடுவதாகவும் கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் முகமது சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தான்.