Published : 28 Mar 2015 09:39 AM
Last Updated : 28 Mar 2015 09:39 AM

பயிரில் நோய்த் தாக்குதல் குறித்த விரைவான ஆலோசனைக்கு வேளாண் அலுவலர்களுக்கு டேப்லெட் வசதி

பயிர்களில் ஏதேனும் நோய் தாக்குதல் ஏற்படும்போது, விவ சாயிகள் வேளாண் அலுவலர் களுக்கு தகவல் அளிப்பதும், அதைத் தொடர்ந்து, வேளாண் அலுவலர்கள் வந்து சோதனை செய்து நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்த ஆலோசனை வழங்குவதும் வழக்கம். இந்தச் செயல்பாடுகள் தொடங்கி முடி வடைவதற்கு காலதாமதம் நேரி டும்பட்சத்தில், நோய்த் தாக்குதல் தீவிரமடைந்து பயிர்கள் வீணாகி பெரும் இழப்பு ஏற்பட்டுவிடும்.

எனவே, நோய்த் தாக்கிய பயிர்களை ஆய்வு செய்வதற் காகச் செல்லும் வேளாண் அலு வலர்கள், விரைவாக நோய்த் தடுப்பு ஆலோசனை வழங்குவதற் காக, குழு சார்ந்த வேளாண் விரி வாக்க நிரந்தர பயணத் திட்டத்தின் கீழ் வேளாண் உதவி அலுவலர்கள் 78 பேருக்கு டேப்லெட் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் துணை இயக்கு நர் சீதாராமன் கூறியதாவது: பயிரில் நோய்த் தாக்குதல் குறித்து தகவல் கிடைத்த வேளாண் உதவி அலுவலர், பாதிக்கப்பட்ட பயிரின் படத்தை டேப்லெட்டில் படம் பிடித்து வேளாண் இயக்ககத்துக்கு அனுப்பிவைப்பார். வேளாண் இயக்ககத்தில் உள்ள வேளாண் ஆராய்ச்சியாளர்கள் அந்தப் புகைப்படத்தைப் பார்த்து கணித்து, பயிரில் எந்தவித நோய்த் தாக்குதல் ஏற்பட்டுள்ளது, பயன் படுத்த வேண்டிய தடுப்பு மருந்து கள், பயன்படுத்தும் வழிமுறைகள் உள்ளிட்ட விவரங்களை விவசாயி மற்றும் வேளாண் உதவி அலு வலரின் டேப்லெட்டுக்கு குறுஞ் செய்தியாக அனுப்பிவைப்பர். இந்தச் செயல்பாடுகள் மிக விரை வாக மேற்கொள்ளப்படும் என்ப தால், பயிர்களில் நோய்த் தாக்கு தல் தீவிரமடையாமல் தடுக்கலாம்.

இந்தச் சேவைக்காக மாவட்டத் தில் உள்ள விவசாயிகளின் செல்போன் எண்கள், வேளாண் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனால், நோய் பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்கும்போதே, அது எந்தப் பகுதியிலிருந்து வருகிறது என்பது எங்களுக்குத் தெரிந்துவிடும். மேலும், டேப்லெட்டில் ஜிபிஎஸ் வசதி உள்ளதால், நோய் பாதித்த பயிர்களை புகைப்படம் எடுக்கும் போதே, அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட பகுதியின் விவரங் களும் பதிவாகும். இதனால், வேளாண் உதவி அலுவலர்கள் இதைப் பயன்படுத்துகிறார்களா என்பதையும் கண்டறிய முடியும். தற்போது, வேளாண் உதவி அலுவலர்கள் சுழற்சி முறையில் தங்கள் வட்டாரப் பகுதிகளில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சேவையை விவசாயிகள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் சீதாராமன்.

இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறும்போது, ‘மாவட்டத்தில் 14 வேளாண் உதவி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், மதுராந்தகம், உத்திரமேரூர், சித்தாமூர் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் இந்தச் சேவையைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, காலியாக உள்ள வேளாண் உதவி அலுவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x