ஆசிட் தாக்குதல்களை தடுப்பது குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம்: தன்னார்வ தொண்டு நிறுவனம் முடிவு

ஆசிட் தாக்குதல்களை தடுப்பது குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம்: தன்னார்வ தொண்டு நிறுவனம் முடிவு
Updated on
1 min read

ஆசிட் வீச்சு சம்பவங்களை தடுப்பது குறித்து மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப் போவதாக தன்னார்வ தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆசிட் தாக்குதலில் பிழைத் தோருக்கான இந்திய அமைப்பு, மேற்குவங்கம், டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களில் செயல் பட்டு வருகிறது. இந்த அமைப்பு தென்னிந்தியாவில் தனது செயல் பாடுகளை தொடங்கியுள்ளது. இதுகுறித்து அமைப்பின் துணை இயக்குநர் அவிஜித் குமார், சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் நடத்திய ஆய்வின்படி ஆசிட் தாக்குதலில் ஈடுபடுபவர்களில் 52 சதவீதம் பேர் 21 முதல் 30 வயது வரை உள்ளவர்கள். ஆண்களின் காதலை பெண்கள் மறுப்பதே ஆசிட் வீச்சு சம்பவங்களுக்கு முக்கிய காரணம். ஒருவரை நிராகரிக்கும்போது தன் மீது ஆசிட் வீசப்படும் அபாயம் உள்ளது என்று பெண்களுக்கு யோசிக்கத் தோன்றாது.

எனவே, 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவி களிடையே ஆசிட் வீச்சு சம்பவங் கள் குறித்து விழிப்புணர்வு பிரச் சாரம் நடத்த உள்ளோம். ஆசிட் வீச்சை தடுப்பது எப்படி என்பதில் அதிக கவனம் செலுத்துவோம்.

இவ்வாறு அவிஜித் குமார் கூறினார்.

இந்த அமைப்பின் தேசிய இயக்குநர் ராகுல் வர்மா கூறும் போது, ‘‘இந்தியாவில் ஆண்டுக்கு 100 முதல் 500 ஆசிட் வீச்சு சம்பவங் கள் நடக்கின்றன. இதில் 12 சதவீதம் தென்னிந்தியாவில் நடக்கிறது. எனவே, தென்னிந்தியாவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளோம். அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதுதான் முக்கியமான தாகும்” என்றார்.

இந்த சந்திப்பின்போது, அமைப் பின் தலைவர் எச்.பி.கனோரியா, தென்னிந்திய தலைவர் மனிஷா லோகியா, நடிகர் பிருத்விராஜ், சங்கர நேத்ராலயா தலைவர் டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in