Published : 15 Mar 2015 11:46 AM
Last Updated : 15 Mar 2015 11:46 AM

மீனவர்களுக்கு வழிகாட்டும் மீனவ நண்பன் கைபேசி திட்டம்: எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் அரிய சேவை

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால் அதை முன்கூட்டியே அவர்களுக்கு அறிவுறுத்துதல் உள்ளிட்ட மீனவர் நலன் காக்கும் சேவைகளை ஓசையின்றி செய்து கொண்டிருக்கிறது எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்.

மீனவர்களுக்குத் தேவையான தகவல்களை வழங்குவதற்காகவும் பயிற்சிகள் அளிப்பதற்காகவும் கிராம அறிவு மையங்களை 1998-லிருந்து நடத்தி வருகிறது எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம். இப்போது தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம், கேரளம், ஒடிஸா ஆகிய ஐந்து மாநிலங்களில் 29 கடலோர மாவட்டங்களில் 611 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 40 ஆயிரம் மீனவர்கள் ‘மீனவ நண்பன் கைபேசி திட்டத்தின்’ கீழ் இந்த மையங்களுடன் தொடர்பில் உள்ளனர்.

இதன் செயல்பாடுகள் குறித்து ‘தி இந்து’விடம் பேசினார் இந்தத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் வேல்விழி. கடல் அலைகளின் உயரம், காற்று வீசும் வேகம், மீன்கள் இருப்பு உள்ளிட்ட தகவல் களையும் மீனவர்களுக்கான அரசின் நலத்திட்டங்கள், அவர்கள் குழந்தைகளின் படிப்புக்கான திட்டங்கள் உள்ளிட்டவைகளையும் அவர்களுக்கு அவ்வப்போது தெரிவிக்கிறோம். பாதுகாப்பாக மீன்பிடிக்கும் முறைகள் குறித்தும் மீனவ பெண்களுக்கு சுகாதாரமான முறையில் மீன்களை கையாள்வது குறித்த பயிற்சிகளையும் கொடுக்கி றோம்.

2007-லிருந்து கைபேசி மூலம் தகவல்களை கொடுக்க ஆரம்பித்தோம். எங்களின் ‘மீனவ நண்பன் கைபேசி திட்டம்’ அப்ளிகேஷனை அலைபேசியில் பதிவிறக்கம் செய்துகொண்டால் நாங்கள் அனுப்பும் தகவல்கள் அனைத்தையும் மீனவர்கள் இருந்த இடத்திலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும்.

இதன்பிறகு குறுந்தகவல் மூலமும் தகவல்களை அனுப்ப ஆரம்பித்தோம். 2009-ல் தகவல் களை ஒருநிமிட ஒலி வடிவில் கொடுத்தோம். கூடவே மீனவர் களின் அவசர கால உதவிகளுக்காக தொடங்கப்பட்ட 24 மணி நேர ’ஹெல்ப் லைன்’ சேவைக்கு இப்போது தினமும் சராசரியாக 250 அழைப்புகள் வருகின்றன.

ஹைதராபாத்தில் உள்ள இந்திய கடல் தகவல்கள் சேவை மையம் எங்களுக்கு நிமிடத்துக்கு நிமிடம் வழங்கும் தகவல்களை மீனவர்களுக்கு புரியும் மொழியில் மாற்றி வழங்குகிறோம்.

சி.டி.எம்.ஏ. போன்களில் ஜி.பி.எஸ். வசதி இல்லாததால் ஆபத்து காலங்களில் மீனவர்கள் தங்களது இருப்பிடத்தை கரையில் இருப்பவர்களுக்கு தெரிவிக்க முடியவில்லை. அந்தக் குறையை போக்குவதற்காகவே 2013-ல் ஆண்ட்ராய்டு சேவைக்கு மாறி அதில் ஜி.பி.எஸ். வசதியையும் சேர்த்தோம்.

இந்த வசதியைப் பயன்படுத்தி தனுஷ்கோடியிலிருந்து நாகை வரை இலங்கை கடல் எல்லைக்கு ஐந்து கிலோ மீட்டருக்கு முன்பாக செல்லும்போதே கைபேசியில் அலாரம் அடித்து எச்சரிக்கை செய்யும் வசதியை மீனவர்களுக்கு வழங்க முடிந்தது.

புயல் மற்றும் விபத்து காலங்களில் அருகிலுள்ள துறைமுகத்தை கண்டறி யும் வசதி ஜி.பி.எஸ்-சில் இருக் கிறது. அண்மையில் எஸ்.ஓ.எஸ். என்ற சேவையையும் வழங்கியிருக் கிறோம்.

இதன்மூலம் ஆபத்து காலங்களில் கரையில் இருக்கும் மூன்று நபர்களுக்கு கைபேசி மூலம் தகவல் அனுப்ப முடியும்’’. இவ்வாறு வேல்விழி தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x