

பாஸ்போர்ட் கோரி விண்ணப் பிக்கும் போது அசல் சான்றிதழ் களை சமர்ப்பிக்க முடியாத நிலையில் உள்ள மாணவர் களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் நேற்று வெளியிட்டுள்ள செய் திக் குறிப்பு:
பள்ளி மற்றும் கல்லூரிக ளில் கல்வி பயிலும் மாணவர் கள் பாஸ்போர்ட் கோரி விண் ணப்பித்தால், அவர்கள் நேர் முகத் தேர்வுக்கு வரும் போது தங்களுடைய பிறப்பு சான் றிதழ், கல்விச் சான்றிதழ் உள் ளிட்டவற்றின் அசல் சான்றிதழ் களை கொண்டு வரவேண்டும் என்பது கட்டாய விதியாகும். இந்நிலையில், பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும் சில மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கு வரும் போது அவர் களால் அசல் சான்றிதழ்களை கொண்டு வர முடியாத நிலை உள்ளது. காரணம், அவர்களு டைய அசல் சான்றிதழ்களை சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங் களில் இருந்து பெற முடிவதில்லை.
இத்தகைய பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் மாணவர் களின் நலன் கருதி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சில சலுகைக களை வழங்கியுள்ளது. இதன் படி, பாஸ்போர்ட் கோரி விண் ணப்பிக்கும் மாணவர்கள் தங்களுடைய அசல் கல்வி மற்றும் பிறப்பு சான்றிதழ்களை சமர்ப்பிக்க முடியவில்லை எனில், தாங்கள் கல்வி பயிலும் பள்ளி, கல்லூரியில் இருந்து சான்றிதழ் பெற வேண்டும். மேலும், தங்களுடைய அசல் சான்றிதழ்களை நகல் எடுத்து அதில் சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்களிடமிருந்து சான்றொப்பம் பெற வேண் டும். மேலும், கல்வி நிறு வனங்களில் இருந்து அடை யாள அட்டையையும் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
தற்போது பொதுமக்கள் பாஸ்போர்ட் கோரி விண் ணப்பிக்கும் போது முகவரி சான்றுக்காக தேசியமயமாக் கப்பட்ட வங்கியின் கணக்குப் புத்தகத்தை (பாஸ் புக்) சமர்ப் பிக்கலாம். இனிமேல், முகவரி சான்றுக்காக பட்டிய லிடப்பட்ட (ஷெட்யூல்டு) பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் மண்டல கிராம வங்கி களில் உள்ள வங்கிக் கணக் குப் புத்தகத்தை அங்கீகார ஆவணமாக சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.